44
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
பெற்றிருக்கின்றது. மயில்களின் தலைகள், மலர்ந்த முகத்துடனுள்ள வீரர்களின் தலைகள், நிணத்தாலாகிய கொடிகள், பச்சிளங் குழந்தைகளின் தலைகள் ஆகியவை கோவிலின் எல்லா இடங்களிலும் தொங்கவிடப் பெற்றிருக்கின்றன.
வீற்றிருக்கும் காளிதேவி
இத்தகைய கோவிலில் வீற்றிருக்கும் காளி எவ்வாறு காணப்படுகிறாள்? அவள் உருவம் பயங்கரமாகச் சித்திரிக்கப்படுகிறது. அவள் வாசுகி, ஆதி சேடன் ஆகிய இரண்டு பாம்புகளில் முத்துக்களாகிய பாற் கற்களை நிரப்பி அவற்றின் மீது நட்சத்திரங்களாகிய இரத்தினங்களைப் பதித்து அவற்றைச் சிலம்புகளாக அணிந்திருக்கின்றாள். நெற்றியில் சிந்தூரப் பொட்டு திகழ்கின்றது. செப்புக் கிண்ணங்கள் போன்ற கொங்கைகளில் வெண்ணீறு பூசப்பெற்றிருக்கின்றது. அவள் யானைத்தோலை ஆடையாக அணிந்திருக்கின்றாள். அதன் குடலையும் பாம்பையும் முறுக்கிக் கச்சாகக் கட்டியிருக்கின்றாள். பாம்பை மேலாடையாக அணிந்திருக்கின்றாள். பொன்னணிகளும், முத்துமாலைகளும், பவள மாலைகளும் அவள் கழுத்தில் இலங்குகின்றன. நான்முகன், இந்திரன், யானை முகத்தோன், முருகன் ஆகியவர்களைப்பெற்ற வயிற்றினையுடையவள் அவள். வீரர்கள் உதிரத்தைக் குடித்து சிவப்புற்ற கைகள், திசை யானைகளின் மத நீரில் கழுவியதால் கருமை நிறத்தையடைந்திருக்கின்றன. அமுதம் கடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சை உண்ட சிவபெருமானைத் தனது அதரபானமாகிய அமுதத்தால்