பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


தாகவும், குருதியை நெய்யாகவும் கொண்டு ஓமத் தீவளர்த்து வேள்வி புரிவர். சில வீரர்கள் தங்கள் சிரங்களை அறிந்து தேவியின் கையில் கொடுப்பர்; அத்தலேகள் தேவியைப் பரவும்; தலை குறைந்த உடலங்கள் கும்பிட்டு நிற்கும்.

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
      அரித்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
      குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ[1]

[அணங்கு-காளி; கொற்றவை-காளி; பாவும்-துதிக்கும்]

என்பது கவிஞன் வாக்கு. பலி பீடத்தில் அரிந்து வைத்த வீரர்களின் தலைகளை ஆண்டலைப் புட்கள் அணுகும்பொழுது அவற்றை அத்தலைகள் வெருட்டியோட்டும். தலைகளை அரிந்தபின் களிப்பால் துள்ளும் உடல்களைப் பேய்கள் தொடுவதற்கு அஞ்சி அவை நிலத்தில் விழும் வரையில் அவற்றைத் தொடர்ந்து நிற்கும்.

மூங்கில்களின் நுனியில் தொங்கும் வீரர்களின் தலைகள் எல்லாத்திசைகளிலும் கண்விழித்து இமையாது சிரிக்கும் காட்சிகளைக் கண்டு சில பேய்கள் விடியும் வரையிலும் தூங்காதிருக்கும். வீரர்களின் தலைகளைக்கொண்ட சில மூங்கில்கள் பாரத்தால் வளைந்து இரத்தப்பெருக்கில் மூழ்கியிருக்கும். அவை இறந்துபட்ட வீரர்களின் உடல்களைக் கவர்வதற்குக் காலன் போட்ட தூண்டில்களைப்போல் தோன்றும்.


  1. தாழிசை -111