பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

47


அரிந்ததலை யுடன் அமர்ந்தே ஆடுகழை
    அலைகுருதிப் புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற
    நெடுந்தூண்டில் என்னத் தோன்றும்[1]

[அமர்ந்து பொருந்தி; கழை-மூங்கில்; காலன் யமன்;]

என்பது கவிஞனின் சொல்லோவியம்.

வழிபடுவோர் பல வகை வாத்திய ஒலிகளைக் கேட்டுத் தேவியை வணங்க வருவர். சாதகர் என்ற தேவியின் மெய்காப்பாளர் தோற்கருவிகளின் ஒலி கேட்டு வருவர் ; யோகினிமார் என்ற தேவியின் பரிவார மகளிர் வாளாயுதத்தை வலக்கையிலும் வீரர்களின் தலைகளை இடக்கையிலும் கொண்டு தேவியிடம் வருவர், பிணங்களைத் தின்னும் பருந்துகள், பேய்கள் முதலியன தேவியின் கோவில்சூழ இருக்கும்; பிணங்களைக் கவருவதில் நரிகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கும். பேய்கள் தம் குழந்தைகளின் பொருட்டு நரிகளின் வாயிலுள்ள இனிய தசைகளைப் பறித்துச் செல்லும்.

காளி தேவியின் கோவிலில்தான் மக்கள் உலகமும் பேய்கள் உலகமும் சந்திக்கும் இடமாகும். ஆனால் அவ்விரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொள்வதில்லை.

இந்திர சாலம்

ஒருநாள் காளிதேவி பேய்கள் சூழ கொலுவீற்றிருக்கும்பொழுது சுரகுரு என்ற சோழன் காலத்தில் காளி தேவியின் சீற்றத்துக்கு அஞ்சி இமயமலை-


  1. தாழிசை -118.