60 கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
இவன் தம்பி இராசேந்திர தேவனும் மேலைச் சளுக்கியருடன் கிருஷ்ணா நதிக் கரையிலுள்ள கொப்பத்தில் போர் புரிந்து போர்க்களத்திலேயே முடி கவிழ்த்துக் கொண்ட செய்தியையும் இந்நூல் குறிக்கின்றது.[1] கிருஷ்ணாவும் துங்கபத்திரையும் கலக்கும் இடத்திலுள்ள கூடல் சங்கமத்தில் வீரராசேந்திரன் குந்தளருடன் போர் புரிந்து வெற்றியடைந்த செய்தி,
- குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற
- கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை[2]
- குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற
- [கோன்-அரசன், குவலயம்-உலகம்]
என்ற அடியால் குறிப்பிடப் பெறுகின்றது. இது விக்கிரமசோழனுலாவிலும்,
- கூடல்
- சங்ககத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
- துங்கமத யானை துணித்தோனும்[3]
என்று குறிப்பிடப் பெற்றுள்ளது.
பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களனைத்தும் நூலில் நுவலப்படுகின்றன. குலோத்துங்கன் இளவரசனானவுடன் திக்கு விசயஞ் செய்து வெற்றி கொண்ட நிகழ்ச்சிகள் முதல் பின்னர் பேரரசனானவரை அவன் அடைந்த வெற் றிகள் யாவும் அவதாரம் என்ற பகுதியில் குறிப்பிடப் பெற்றுள்ளன. குலோத்துங்கன் இளவரசுப் பட்டம் எய்தியதும் போர்வேட்டெழுந்து வடதிசை நோக்கிச் சென்று மத்திய மாகாணத்திலுள்ள வத்தவ நாடாகிய சக்கரக் கோட்டத்தை வயிராகரம்