பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


வேலாலும், வில்லாலும் வேலி கோலி
      வெற்பதனை விடியளவும் காத்து நின்றே,[1]

என்று கூறப்படுதலானும் இவற்றை அறியலாம்.

போர்க்களத்தில் தோற்றோடிய அரசர் விட்டுப் போன குடை, சாமரம் முதலியவற்றை வென்ற வேந்தர் கைப்பற்றி அவற்றைப் பெருமையுடன் பயன்படுத்துவர். குலோத்துங்கன் காஞ்சியிலமைக்கப்பெற்ற சித்திரமண்டபத்தில்வீற்றிருந்தபொழுது

    வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு
தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை
     தங்கள் தங்கரத் தாற்பணி மாறவே.[2]

[வெந்இடுமுன்பு முதுகுகாட்டியோடுமுன்பு ; இடுவிட்டுப்போன ; பனிமாற-குற்றேவல் புரிய]

என்று கவிஞர் கூறுவதை நோக்குக, போரில் தோற்றோடிய அரசர்கள் மலைக்குகைகளிலும், மலைப் பள்ளத்தாக்குகளிலும், மறைவது அக்கால இயல்பாக இருந்தது.[3] காடு, மலை, கடல் முதலியவை சிறந்த அரண்களாக மதிக்கப்பெற்றிருந்தன.

கானரணும் மலையரணும் கடலரணும்
     சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தான் அரணம் உடைத்தென்று கருதாது
     வருவதும் அத் தண்டு போலும்[4]

என்றவற்றால் இதனை அறியலாம்.

சினங் கொண்ட படைவீரர் பகையரசர் நாட்டில் புகுந்து எதிர்ப்பட்ட ஆடவரை யெல்லாம் அழிப்பர். போரிற் பிடித்த அரசர்களை விலங்கிடு


  1. தாழிசை 464,
  2. தாழிசை 325
  3. தாழிசை.449
  4. தாழிசை-377