பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே[1]

என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சைக் கூற்றினாலும் அறியலாம். அது கிடக்க.

இந்நூலிலுள்ள அணிகள்

இனிக் கலிங்கத்துப்பரணியில் காணும் அணி வகைகளை ஆராய்வோம். சயங்கொண்டாரின் கற்பனை ஊற்றிலிருந்து எத்தனையோ அணிகள் தோன்றியுள்ளன. அவர் காட்டும் சொல்லோவியங்கள் பல்வேறு காட்சிகளையும் நம் மனக்கண் முன் அழகுபெறக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. சொல்லணிகளும் பொருளணிகளும் நூல் முழுவதும் மலிந்து காணப்படுகின்றன. தன்மை நவிற்சி பயணிகள் பொருள்களின் உண்மையான இயல்புகளை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன. உவமை பணிகள் பொருள்களின் தன்மைகளை விளக்கமுற எடுத்தோதுகின்றன. தற்குறிப்பேற்ற அணிகள் பொருள்களின் இயல்புகளைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. உயர்வு நவிற்சி பொருள்களின் மேம்பாட்டைப் புலனாக்குகின்றன. சிலேடையணிகள் கூறப்படும் பொருள்கள். இருவேறு வகைப்பட்டு இன்பம் தோன்றத் துணைசெய்கின்றன. இவை ஒன்பான் சுவைகளை வெளிப்படுத்தி நூலினைச் சிறப்பிக்கின்றன. இடத்திற்கேற்றவாறு சந்த நயம்


  1. செந்தமிழ் -தொகுதி-7. பக்கம் - 144 லிருந்து எடுத்தது."