பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


என்ற தாழிசைகளில் கலவிப்போர் நிகழுங்கால் இயல்பாக நடைபெறும் செயல்கள் உரைக்கப்பெற் றிருப்பதை எண்ணி மகிழ்க.

வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ[1]

[வாங்க - பற்றிக்கொள்ள ; தோயம் - கடல் ; கலவி - புணர்ச்சி; துங்கம் - மேன்மை.]

என்ற தாழிசை கலவிப் போருக்கு முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்த சொல்லோவியமாகும். விழி சிவக்க, உதடு வெளுக்கக் கலவிப்போர் புரிந்தமை இதில் சித்திரிக்கப் பெற்றிருக்கின்றது.

உவமை

கலிங்கத்துப் பரணியில் உவமையணி மிகச் சிறப்பான முறையில் கையாளப் பெற்றுள்ளது. அணிகள் பலவற்றுள்ளும் மிகவும் எளிமையானது உவமையணி தான். குழந்தைகளிடமும் ஒப்புமைச் சக்தி இருப்பதால், அவர்களிடமும் இவ்வணி தோன்றக்கூடும். எனவே, உவமையணி இல்லாத கவிதைகளே இரா என்று கூடக் கூறி விடலாம். ஏனைய அணிகள் யாவும் அழிந்து பட்டு இவ்வொன்று மட்டிலுமே எஞ்சி நின்றாலும் கவிதை சிறப்புடன் இலங்கக் கூடும். இந்த உவமையணியைக் கவிஞர் சயங்கொண்டார் பல்வேறு வடிவங்களில் கையாண்டுள்ளதை நூல் முழுவதும் படிப்ப


  1. தாழிசை-61 இதைத் தாழிசை 33-உடன் ஒப்பிடுக