பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

93


அடியிலுள்ள 'தனுக்கோட்டம்' ஆகிய இரண்டு சொற்களிலும் முதல் எழுத்தைத் தவிர ஏனைய எழுத் துக்கள் ஒன்றி நின்று பொருள் வேற்றுமையைப் புலப்படுத்தியமை காண்க.

நக்காஞ் சிக்கும் வடமலைக்கும்
நடுவில் வெளிக்கே வேடனை விட்(டு)
அக்கா னகத்தே உயிர்பறிப்பீர்
அம்பொற் கபாடம் திறமினுே.[1]

[வடமலை-மாலையணிந்த முலை, இமயம் ; வெளி - இடை, போர்க்களம்; வேடனை = வேள் +தனை, கானகத்தே கான் நகத்து; மணம் பொருந்திய மலை போன்ற கொங்கைகளால்.]

என்ற தாழிசையிலுள்ள சிலேடை நயம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. இதில் காஞ்சி இடையணியையும், காஞ்சி நகரையும் குறித்தது; வடமலை மாலையணிந்த முலையையும், இமயத்தையும் குறித்தது ; வெளி இடையையும், போர்க்களத்தையும் குறித்தது. வேடனை என்பது 'மன்மதனை' என்றும் வேடன் போன்ற 'கருணாகரனை' என்றும் பொருள் பட்டது. கானகம் என்பது 'காடு' என்றும் மணம் பொருந்திய மலை போன்ற கொங்கை என்றும் இருபொருள் பட்டது. மகளிர் தம் இடையழகாலும், கொங்கையழகாலும் தம் கொழுநர்க்குக் காம வேதனையை மிகுவித்து அவர்களைத் தம் வயமாக்கிக் கொள்வர் ; கருணாகரனும் வேடன் விலங்கு, பறவை முதலியவற்றின் உயிரைக் கவர்தல் போல் தன் பகைவரின் உயிரைக் கவர்வான். இத் தாழிசை இந்த இரண்டு பொருள்களையும் பயந்து நிற்கின்றமையை எண்ணி உணர்க. இவ்வாறு


  1. தாழிசை-73