பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
131



காத்மண்டுவிற்குத் தென் கிழக்கில் இரண்டரை கல் தொலைவில் இன்று நின்று காட்சிதரும் அந்நகர், அசோகன் வளர்த்த புத்த சமய நெறியை, இன்றும் கடைப்பிடித்து நிற்கிறது. நேபாளத்திற்கு, அசோகனுடன் அவன் மகள் சாருமதியும் சென்றிருந்தாள்; தந்தை தாய்நாடு திரும்பவும் திரும்பாது, துறவறம் மேற் கொண்டு, பசுபதிநாத்திற்கு வடக்கில், தேவப்பட்டணம் எனத் தன் கணவன் பெயரால் ஒரு நகரையும், அதனி டையே கன்னியர் மாடம் ஒன்றையும் அமைத்து அறம் வளர்க்கத் தொடங்கி விட்டாள். அந்நகரும், லலிதயாதன் நகரின் நடுவிலும், அதன் நாற்புறத்திலும் அசோகன் நாட்டிய அழகிய கோயில் மாடங்கள் ஐந்தும் இன்றும் ஓங்கி உயர்ந்து விளங்குகின்றன.


கலிங்கப் போருக்குப் பிறகு, அசோகன் உள்ளத்தில் அன்பும் அருளும் இடம்பெற்றன. அவன் க்ண்ட அற வழியின் தலையாய கொள்கையாக, விலங்கினத்தில் விளங்கித் தோன்றும் கடவுட்டன்மையைக் கண்டு மதித்தல் மேற்கொள்ளப்பட்டது. மிக மிக இழித்தது என்று கருதப்படும் உயிருக்கும், இறைவன் தனக்கு இயல் பாக அளித்துள்ள வாழ்நாளின் இறுதிவரை இருந்து வாழும் உரிமையுண்டு என அவன் உளமார உணர்ந்தான்; அந்நெறியில் நிற்குமாறு தன் நாட்டவர்க்கு ஆணையிட் டான்; சிற்றுயிர்க்கு உற்ற துணையாதல் வேண்டும் என்பதில் ஆழ்ந்த உள்ளம் உடைய அசோகன், அதை மதியாது. உயிர்களுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்குக் கொலைத்தண்டம் அளிக்கவும் துணிந்தான். அரிது அரிது. மானிடராதல் அரிது என்று போற்றத்தகும் மக்கள் உயிரும், அவன் அறவழியின் கண்களுக்கு அற்பமாகவே. புலப்பட்டது. கொல்லாமை யறத்தை உலகத்தவர்க்கு ஊட்ட முன்வந்த அசோகன். அதைத் தன் வாழ்வின் தலையாய அறமாகக் கருதினான்; இளமையில், அரண்