பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
133



நடை மருத்துவ நிலையம், பதினெட்டாம் நூற்றாண் டில் இருந்த நிலைமையை அறிந்தால் மௌரியர் காலத்தில் அது இருந்த நிலைமையை ஒருவாறு அறியலாம். தொன்றுதொட்டு ஆலின் கீழ் நடைபெற்று வந்தமையால் ஆலமர மருத்துவ நிலையம் என்று வழங்கப் பெறும். அது மிக உயர்ந்த மதில்கள் சூழ்ந்து, பரந்தகன்று, வகை வகையான விலங்குகள் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும். வகையில், பல பகுதிகளாகப் பிரிந்திருந்தது ; நோயுற்ற விலங்குகள், மிகவும் விழிப்பாய்க் கண் காணிக்கப்பட்டன. அவ்விடம், அவற்றிக்கு ஒரு சிறந்த காப்பிடமாய்த் திகழ்ந்தது; கால் ஒடிந்தோ, அல்லது பிற வகையாலோ இயங்கும் ஆற்றலை இழந்துபோன விலங்குகளை, உரியார் அவ்விடத்திற்குக் கொணர்வர்: உரியவரின், நாடு, இனம், மொழிகளின் வேற்றுமை கருதாது அவை போற்றப்படும். அதில், குதிரைகள், கோவேறு கழுதைகள், காளைகள், ஆடுகள், குரங்குகள், போலும் விலங்குகளும், புறாக்கள், கோழிகள் போலும் பறவைகளும் பருத்துவம் பெற்றன. முதிய ஆமை ஒன்று, எழுபத்தைந்து ஆண்டுகள், அம்மருத்துவ மனை யில் இருந்து வந்ததாம். எலி, சுண்டெலி, மூட்டைப் பூச்சிகளுக்கான தனி விடுதிகளும் ஆங்கு இருந்தனவாம்.

கொல்லாமை அறத்தை அடுத்து, அசோகன் மேற் கொண்ட அறம், தன்னை ஈன்ற தாய் தந்தையர்களையும், தனக்கு அறிவூட்டிய ஆசிரியனையும் உயர்வாக மதித்துப் பணிந்து ஒழுகவேண்டும் என்பதாம்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'; எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற உண்மைகளை ஒவ்வொரு வரும் உணர்தல் வேண்டும். தம்மினும் தாழ்ந்த தம் மக்கள், மாணாக்கர், ஏவல் இளையர், அடிமைகள் ஆகியோர் தம்மிடம் பணிவாய் ஒழுகுதல் வேண்டும் என்பதை எதிர்நோக்கும் முதியோர்கள், அதற்கு மாறாக,