பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


அருளறப் பெருநெறியை, இவ்வாறு தன் அரசியல் ஆணைகள் மூலம் தன் நாட்டு மக்களிடையே பரப்பிய அசோகன், அதன் பயனாகத் தன் காலத்து மக்கள் பெறுவதே போல், வருங்கால மக்களும் அடைதல் வேண்டும் என்று விரும்பினான்; அதன் பயனாய், அருளறத்தின் உண்மைகளையும், அவ்வ்றம் நிலை பெற மக்களும், மன்னனும் மேற்கொள்ள் வேண்டிய செயல் முறைகளையும், தன் நாடெங்கும் உள்ள கற்பாறைகளில் பொறித்து வைத்தான்; அவை பொறிக்கப் பெற்ற ஒற்றைக் கற்களால் ஆன தூண்களை ஆங்காங்கே நாட்டி வைத்தான். அவற்றைக் கால முறைப்படி எட்டு வகையாகப் பிரித்து வரிசை செய்துள்ளார்கள், வரலாற்றாசிரியர்கள்.

1. பாறைக் கல்வெட்டு ஆணைகள் பதினான்கு: இவை அசோகனின் அரசியற் கொள்கைகளையும், அறிவொழுக்க நெறிகளையும் விளக்குகின்றன; இவை அனைத்தும், தலைநகர்க்கு வெகு தொலைவில் உள்ள எல்லைப்புற மாகாணங்களிலேயே காணப்படும்.

2. கலிங்க நாடு குறித்த கல்வெட்டு ஆணைகள்: இவை புதிதாக வென்ற கலிங்க நாட்டில் நிலவ வேண்டிய அரசியல் முறைகளையும், அந்நாட்டின் எல்லைகளில் வாழும் காட்டு மக்கள் பால் காட்டவேண்டிய நெறி முறைகளையும் எடுத்து இயம்புகின்றன.

3. குகைக் கல்வெட்டுகள்: கயா மாவட்டத்தில் பராபர் என்னும் இடத்தில், அஜீவீக சமயத்தைச் சேர்ந்த அம்மண சந்நியாசிகள் வாழ்வதற்காகஜீவீ குகைகள் குடைந்து அவற்றை அவர்க்கு உரிமையாக்கும் அசோகனின் ஆணை, அம்மூன்று குகைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

5. தராயி கற்றூண் கல்வெட்டுகள்: புத்தன் பிறந்த புண்ணிய இடங்களுக்கு அசோகன் சென்ற செய்தியை அறிவிக்கின்றன, இக் கல்வெட்டுக்கள் இரண்டும். -