பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

டில் கும்பகோணத்திற்கு அணித்தாக உள்ள திருப்புறம்பயத்தில் வெற்றியின் விளைவாகவே வந்து சேர்ந்தது. தம் பெற்ற இரு நாடுகளுக்கு இடைப்பட்ட சோணாட்டைத் தம் ஆணைக்கீழ் வைத்து கொள்ள வேண்டும் என்பதில் பல்லவ பாண்டிய வேந்தர் இருவருமே ஆர்வம் காட்டின்ர்: அதன் பயனாய் அவ்விரு பேரரசர்களும் பெரும் படை துணை செய்யவந்து திருப்புறம்பயத்தில் போரிட்டனர்; அக்காலை விசயாலயன் முதுமை அடைந்துவிட்டானாகவே, அவன் மகன் ஆதித்தன், பல்லவர் பக்கம் நின்று போரிட்டான். போரில் பாண்டியன் தோற்றான். பல்லவன் வெற்றி கொண்டானாயினும், அவன் படைவலி, அறவே அழிந்துவிட்டது. வென்ற நாட்டில் தன் ஆட்சியை நிலைநாட்டும் ஆற்றல் அவனுக்கு இல்லாது போகவே, சோணாட்டு ஆட்சிப் பொறுப்பனைத்தையும் ஆதித்தசோழன் பால் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டான். ஆதித்தன் சோழ மண்டலம் முழுமைக்கும் மன்னனாய் முடி புனைந்து கொண்டான். குலோத்துங்கன் பிறந்த பிற்கால சோழர் பேரரசு பிறந்த வரலாறு இது.

பிற்காலச் சோழர் பேரரசு பிறந்த வரலாற்றைக் கண்டோம். வரலாற்றாசிரியர்களால், அச்சோழர் வரிசையில் வைத்து மதிக்கப் பெறும் குலோத்துங்க அச்சோழர் குடியில் பிறந்தவனல்லன். ஆயினும் அச்சோழர் குலத்தவனாகவே வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அவர்கள் அவ்வாறு கருதுதற்குரிய காரணம், அவனுக்கு முன் அச்சோழர் அரியணையில் அமர்ந்திருந்தார் வரலாற்றை உணர்ந்தவர்க்கே புலனாகும். ஆகவே, அச்சோழர் குலத்தில் தோன்றி அவனுக்குமுன் நாடாண்டோர் வரலாற்றையும் சிறிது கண்டு செல்வோமாக. .

முதல் ஆதித்தன்: திருப்புறம்பயப் போர்க்களத்தில் மாண்ட பாண்டிய பல்லவ வீரர்களின் பிணங்களை எருவாக இட்டுச் சோழர் பேரரசு என்ற மரத்திற்கு வித்திட்ட

கー2