பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23



இருப்பது நலியும் ஒர் அரசுக்கு நன்றன்று; அதை அறிந்து கொண்டான். அக்காலைப் பாண்டி நாட்டு அரியணையில் அமர்ந்திருந்தோன்; உடனே, அவன் சோணாட்டுத் தலைமையை வெறுத்துத் தனியரசு அமைத்துக் கொண் டான். ஆகக் கண்டராதித்தன் ஆட்சிக் காலத்தில் சோழர் பேரரசு, சோணாட்டு எல்லைக்குள்ளேயே நின்று விட்டது. கண்டராதித்தன் அது குறித்துக் கவலை கொண்டிலன்; அவன் மனம் மன்றாடும் இறைவனிடத் திலேயே இருந்து விட்டது ; அவனைப் பாடிப் பரவிய வாறே தன் வாழ்நாட்களைக் கழித்துவிட்டான்; ஆனால் வானாள் இறுதியில் செய்த அரசியல் முடிவு, சோழர் ஆட்சியை நன்னிலைக்கண் நாட்டுதல் வேண்டும் என்ப தில் அவனுக்கும் நாட்டம் இருந்தது என்பதை உறுதி செய்வதாயிற்று. முதிர்ந்த ஆண்டில் தனக்குப் பிறந்த மகன், ஆட்சிப் பொறுப்பேற்கலாகா இளமைப் பருவத் தனாதல் அறிந்து, ஆட்சியை அவன் பால் ஒப்படைக்காது, தன் இளவல் அரிஞ்சயன் பால் ஒப்படைத்து ஒய்வு பெற் றான். தில்லையாடிபால் உள்ளம் நெகிந்து அவன் பாடிய பாக்கள் பல. அவற்றுள் ஒன்று:

‘சீரான் மல்குதில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடி

-- தன்னைக்

காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த

ஆராஇன் சொல் கண்டராதித்தன் அருந்தமில்மாலை

- வல்லார்

பேராஉலகில் பெருமையோடும் பேரின்பன் எய்துவாரே.”

அரிஞ்சயன் : முதற் பராந்தகனுக்குக் கேரள அரசன் பழுவேட்டரையன் மகள்பால் பிறந்தவன் இவ்வரிஞ்சயன், பராந்தகன். இராஷ்டிரகூட மன்னானனோடு நடத்திய போரில் இவனும் பங்குகொண்டிருந்தான். இவன் அரியணை அமர்ந்ததும், தக்கோலப் போரில் இழந்த சோணாட்டுப் பகுதியை மீட்பதில் தன் சிந்தையைச்