பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

இராசராசன் ஆற்றிய கன்னிப் போர் காந்தளூர்ச் சாலைப் போராம். இராசராசன் அரியணை ஏறியதும், அரசியல் தூதுவன் ஒருவனைச் சேரன் அரசவைக்கு அனுப்பியிருந்தான்; அக்காலை ஆங்கு அரசோச்சியிருந்த அரசன் அத்தூதுவனை யாது காரணத்தாலோ சிறையில் அடைத்துவிட்டான். தூதுவனுக்கு இழைத்த கேட்டினைத் தனக்கு இழைத்துவிட்டதாகவே மதித்தான் இராசராசன்; உடனே அவ்விழிவைத் துடைக்கத் துணிந்து, சோழர் படை சேரநாடு நோக்கி செல்லவிட்டான். சோழர்படை சேரநாடு செல்ல வேண்டுமாயின், அது பாண்டி நாட்டைக் கடந்தே செல்லுதல் வேண்டும்; ஆகவே சோழர் படை முதலில் பாண்டிநாடு புகுந்தது. அப்போது பாண்டி நாட்டில் அரசாண்டு கொண்டிருந்தவன், சேரனின் உற்ற நண்பனாவன். அதனால், அவன் சேரநாடு நோக்கிச் செல்லும் சோழர் படையைத் தடுத்துப் போரிட்டான். பாண்டியன்மீது போர் தொடுக்கும் கருத்து, படை புறப்படும்போது இராசராசனுக்கு இல்லை என்றாலும், பாண்டியன் வலியவந்து எதிர்க்கவே அவனோடு போரிட்டு வெல்வது இன்றியமையாததாயிற்று; அதனால் சோழர் படை பாண்டியப் படைமீது பாய்ந்தது. பாண்டியன் தோற்றுப் புறமுதுகிட்டான்.

பாண்டிநாட்டில் வெற்றிக்கொடி நாட்டிய சோழர் படை, பின்னர்ச் சேரநாடு நோக்கி விரைந்தது. சேரநாடு புகுந்த சோழர் படை, காந்தளூர்ச் சாலை எனும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்து ஆங்கு நின்றிருந்த சேரரின் பெரிய கடற்படையை அறவே அழித்து வெற்றி கொண்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோயிலுக்கு வடமேற்கேயுள்ள உதகையை அடைந்தது. சேரன், சோணாட்டுத் தூதுவனை அவ்வுதகை நகர்ச் சிறையிலேயே அடைத்திருந்தானாதலின், சோழர்படை அந்நகரைக் காத்திருந்த சேரர் படையைச் சிதறடித்தது. அந்நகரைச் சூழ்ந்திருந்த அரண் மதில்களையும், மாளிகைகளையும் இடித்துட் பொடியாக்கி, எங்கும் எரிஎழப் பாழ்