பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37

கழித்து. ஒரு பெரிய படையைத் திரட்டிக் கொண்டுவந்து, ஈழநாட்டில் தான் நாட்டிவந்த சோழ அரசை அழிக்க முனைவது அறிந்து, இராசேந்திரன் அளவிலாச் சினம் கொண்டான். ஈழநாட்டின் மீது மீண்டும் படையெடுத்துச் சென்றான். வெற்றித் திருமகள் இம்முறையும் இராசேந்திரனுக்கே மாலை சூட்டினாள். ஈழத்தரசனை வெற்றி கொண்ட இராசேந்திரன், வெறுங்கையோடு வீடு திரும்பவில்லை, ஈழத்தரசர்கள் வழிவழியாக அணியும் விழுச்சிறப்புடைய மணிமுடியையும், அவர் தேவியர் அரியனை அமருங்கால் அணியும் அழகிய முடியையும் கைப்பற்றிக்கொண்டான். அம்மட்டோ! தன் பாட்டனுக்குப் பாட்டனாகிய முதற்பராந்தகனுக்குத் தோற்று ஓடிய பாண்டியன், ஈழநாட்டில் அடைக்கலமாக அளித்து வைத்தனவும், அப்பராந்தகன் பலமுறை முயன்றும் அவனால் அடைய இயலாது போயினவும் ஆகிய பாண்டியர் மணிமுடியையும், இந்திர ஆரம் முதலாம் பிற அரசச் சின்னங்களையும் கைப்பற்றிய களிப்போடு, அவ்வீழநாட்டுக் காவலனையும் சிறை கொண்டு சோணாடு வந்து சேர்ந்தான்.

தென்னகத்தில் தன்னை எதிர்ப்பவர் எவரும் இலர் என்ற பெருநிலையைப் பெற்றுவிட்ட பின்னர், இராசேந்திரன், கங்கை பாயும் வடநாட்டிலும், கடல்கடந்த கடார நாட்டிலும் தன் புகழ் பரவ வேண்டும் என்று விருமபினான். அவ்வாறு விரும்பியவன், அங்கெல்லாம் சென்று வெற்றி பெற்று வரவேண்டுமாயின், தானும் தன் பெரும் படையும் நெடுநாட்கள் வெளிநாட்டில் வாழவேண்டி வரும்; தான் நாட்டில் இல்லை என்பதைப் பகைவர் உணர்வராயின் உடனே உள்நாட்டில் கலகத்தை மூட்டி உரிமைப் போர் தொடுத்துவிடுவர்; அந்நிலை உண்டாகவிடுவது தன் பேரரசின் ஆணிவேரைப் பறிப்பதுபோலாம்; ஆகவே, அக்காலத்தில் அந்நிலை ஏற்படா வண்ணம் ஆவன புரிந்துவிட்டே நாட்டைவிட்டு அகலுதல் வேண்டும் என அறிந்