பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41

வேறியதும், இராசேந்திரன் கடாரப் படையெடுப்பில் கருத்தைச் செலுத்தினான் . கங்கைப் படையெடுப்பில் செய்ததுபோல், படைத் தலைமையை இப்போது பிறர் பால் ஒப்படைக்க கருதினானல்லன், கடாரப் படையெடுப்பு கலங்களின் துணையால் நடைபெறுதல் வேண்டும். ஆகவே, அக்கலங்களைக் காலமும் நிலையும் அறிந்து செலுத்திச் செல்லும் சிறந்த அறிவுடையான் ஒருவனே அப்படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிச் செல்லுதல் வேண்டும் என உணர்ந்த இராசேந்திரன், அப்பெரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டான். சோணாட்டின் சிறந்த கடற்றுரையாகிய புகார் நகரை விட்டு, போர் வீரர்களைத் தாங்கிய போர்க்கலங்கள் பல, கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டன. பலநாள் கழித்து, கலங்கள், இக்காலை சுமத்ரா என வழங்கும் நாட்டின் மேற்கரையில் இருந்த அந்நாட்டின் தலைநகரும், சிறந்த துறைமுகப் பட்டினமுமாகிய பூரீவிசய நகரில் கரையேறின. கலங்களில் வந்திறங்கிய வீரர்களைத் துணைக் கொண்டு, மலேயா, சுமத்ரா நாடுகளை உள்ளடக்கிய பெருநாடாய், பூரீவிசய நாடு எனும் சிறப்புப் பெயருடையதாய் விளங்கிய நாட்டின் வேந்தனாகிய சங்கிராமவிச யோத்துங்கவர்மனை வென்று அடிமை கொண்ட இராசேநதிரன், அவன் பட்டத்து யானையையும், பெரும் பொருட்குவியலையும், வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்து கொண்டான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அந்நாட்டின் சிறந்த பெரிய நகரங்களாய பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், மாபப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம், இலாமுரிதேசம், கடாரங்களுக்கெல்லாம் சென்று, வெற்றிக் கொடியை நாட்டி விட்டுத் தாய்நாடு திரும்பினான்; வழியில் மாநக்கவாரத் தீவுகளில் தங்கி அங்கும் தன் ஆற்றலை நிலைநாட்டி வந்தான்.

கலம்பல செலுத்திக் கடல் கடந்து சென்று கடாரத்தை வென்ற இவ்வரிய செயலை, இராசேந்திரன்,