பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58



வெற்றி கொண்டவாறே, கோதாவரியைத் தாண்டி, கலிங்கநாட்டைக் கடந்து, சக்கரக்கோட்டத்திற்கு அப்பாலும் சென்று,வேங்கிநாட்டை மீளவும் வெற்றி கொண்டான், வென்ற வேங்கிநாடடு அரியணையில், மாண்டு போன அந்நாட்டு மன்னனின் இளவலாகிய விசயாதித்தனை அமர்த்தி, ஆங்கு அமைதியை நிலைநாட்டி விட்டுச் சோணாடு திரும்பினான்.

தாய்நாடு திரும்பிய வீரராசேந்திரன் வாழ்நாள் அமைதியாகக் கழிந்திலது, அவன் தலைநகர் வந்து சேர்வதற்கு முன்னரே, ஈழத்திற்கும், கடாரத்திற்கும் செல்ல வேண்டிய பணிகள் காத்துக் கிடந்தன. ஆட்சி உரிமை பெறும் கருத்தோடு அமர் தொடுத்து எழுந்த ஈழநாட்டரசனைத் தன் படைத்தலைவனை அனுப்பி வெற்றிகொண்டான் வீரராசேந்திரன். தன் ஆட்சி உரிமையைத் தாயத்தார் கைப்பற்றிக்கொள்ளவே. தமிழகம் புகுந்து, தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசனை, அவன் அரியணயில் அமர்த்தும் கருத்துடையனாகிக் கடற்படையோடு கடாரம் சென்று, வெற்றிகொண்டு, வந்த நண்பனை அந்நாட்டு வேந்தனாக்கிவிட்டு, அவ்விழுச்சிறப்போடு வந்து சேர்ந்தான்.

மேலைச் சாளுக்கிய நாட்டில் ஆகவமல்லன் இறந்த பின்னர், அவன் மூத்தமகன் சோமேசுவரன் என்பான் அரியணை ஏறினான். ஆனால் அவனோ அறநெறி மறந்து ஆட்சி புரியத் தலைப்பட்டான். அதனால் அவன் குடிகள் அவன் ஆட்சியை வெறுத்தனர். அண்ணன் ஆட்சி முறையால், நாடு நலிவெய்துவதைக் கண்ணுற்ற, ஆகவமல்லனின் வீரத்திருமகனாகிய விக்கிரமாதித்தன், அவனுக்கு அறிவுரை பல கூறினான். ஆனால் அதற்குப் பலனாக, அவன் பகைமையைப் பெற்றான். தம்பியோடு தாய் நாட்டைவிட்டு வெளியேறித், துங்கபத்திரை ஆற்றங்கரையில் தங்கியிருந்தான். சிலநாள். மேலைச்சாளுக்கிய மன்னர் களுக்கிடையே உருப்பெற்றஇப்பகைமையை உணர்ந்தான் வீரராசேந்திரன், அதைப் பயன்கொண்டு, அம்மேலைச்