பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


மக்கள் தாய் முறைப்படி, தந்தையின் மரபையே தன்னுடைய மரபாகக் கொள்ள வேண்டிய குலோத்துங்கன், மேற்கூறிய காரணங்களால், தன்னைத் தந்தை பிறந்த சாளுக்கிய மரபினனாகக் கருதாது, தன் தாயும், தன் தாய்வழி முதல் தலைமுறைப் பாட்டியும் , இரண்டாந் தலைமுறைப் பாட்டியும் பிறந்த சோழர் மரபினனாகவே கருதினான்.மேலும், தான் பிறந்தது.சோழ மண்டலத்தில், தாய்ப்பாட்டன் அரண்மனையில் ஆதலாலும், தன் இளமைப் பருவத்தின் பெரும் பகுதி சோணாட்டிலேயே கழிந்து விட்டமையாலும், தமிழ் மொழியையே தாய் மொழியாகக் கொண்டு, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களிலேயே. பயின்று விட்டமையாலும் தன்னை முழுக்க முழுக்கச் சோழர் குலத்தவனாக கருதி விட்டான்; அவன் கருத்தை வலியுறுத்தும் வகையில், சோணாட்டு அரியணையில் அமர்ந்து ஐம்பது ஆண்டுகள், அந்நாடாளும் பெரு வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்து. ஆகவே, சாளுக்கியர் குலக்குரிசிலைச் சோணாட்டுக் கோமகனாகவே கொண்டார்கள் வரலாற்று நூலாசிரியர்கள். நாமும் அவ்வாறே கொள்வோமாக. - - -

கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழர் அரண்மனையில் பிறந்த குலோத்துங்கன், தன்னை ஈன்ற தாய்ப் பாட்டி, கங்கை கொண்ட சோழன் மாதேவி பேரன்பு காட்டி வளர்க்க வளர்ந்து பிள்ளைப் பருவம் எய்தினான்; பேரரசு நடாத்தும் ஒரு பேரரசர் அரண்மனையில் வளர்ந்தமையால், அவர் பண்புகள் அனைத்தும் அவன் உடைமையாயின; இவன் மாமன்மார்களாகிய இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீர ராசேந்திரன் மூவரும் தன்னேரில்லாப் பெருவீரர்களாவர், அவர்கள் கண்ட போர்க்களங்களும், பெற்ற வெற்றிகளும் பற்பல. அவர்களிடையே வளர்ந்த குலோத்துங்கனும் ஆண்மை ஆற்றல்களில் அவரொப்பச் சிறந்து விளங்கினான். தங்கள் உடன்பிறந்தாளின் ஒரே மகனாகிய