பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65

தந்தான்; வத்தவநாட்டில் வெற்றித்திருமகளை மணந்து, செல்வத் திருமகளோடு வேறு நாடு நோக்கிச் சென்றான் குலோத்துங்கன்; குலோத்துங்கன் பெற்ற இக்கன்னிப், போர் வெற்றியைக் கலிங்கத்துப் பரணியும், அவன் மெய்க் கீர்த்திகளும் புகழ்ந்து பாராட்டுகின்றன. அம்மெய்க் கீர்த்திகளுள் ஒன்று இது: .


“விளங்கு சயமகளை இளங்கோப் பருவத்துச்
சக்கரக்கோட்டத்து விக்ரமத்தொழிலால்
புதுமணம் புணர்ந்து, மதவரையீட்டம்
வயிராகரத்து வாரி.”

குலோத்துங்கன், இவ்வாறு வெற்றிப்புகழ் வேட்கை மிக்கு வீரத்திருவுலா மேற்கொண்டிருக்கும் காலத்தில், சோணாட்டில், மனைவி மதுராந்தகியின் தந்தை, இரண்டாம் இராசேந்திரன் இறக்க, அவனுக்குப்பின் அரியணையேறிய தன் இளையமாமன் வீரராசேந்திரனும் மேலைச் சாளுக்கியரோடு மாளாப்போர் மேற்கொண்டிருந்தான்; அப்போரின் ஒரு பகுதியாய், அம்மேலைச் சாளுக்கிய மன்னனின் மக்களுள் ஒருவனாகிய விக்கிரமாதித்தன், வேங்கிநாடு புகுந்து, விசயாதித்தனைத் துரத்திவிட்டு, அந்நாட்டின் ஆட்சியைத் தன்னுடைய தாக்கிக்கொண்டிருந்தான். அஃதறிந்த வீரராசேந்திரன் வேங்கிநாட்டின் மீட்சியை முன்னித் துங்கபத்திரைக் கரையை விட்டு புறப்பட்டுவிட்டான்; மாமனுக்குத் துணை புரிய வேண்டி இல்லையாயினும் தன்நாட்டை மீட்க வேண்டியாவது வேங்கிநாடு நோக்கி விரைந்து செல்லவேண்டுவது தன் தலையாயகடன் என்பதை அவன் உணர்ந்தான், உடனே, அவனும் அவன் படையும், வேங்கிநாடு நோக்கிச்செல்லும் வீரராசேந்திரன் படை.யோடு சேர்ந்து கொண்டனர், இடைவழியில் வந்தெதிர்த்த, மேலைச்சாளுக்கிய தண்டத் தலைவர் மூவரையும், விசயவாடையில் வெம்போர்புரிந்து வென்று துரத்தினான். பின்னர்க் கோதாவிரியாற்றையும்

க-5