பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68

டாடினான் வீரராசேந்திரன். சோணாட்டுத் தலைநகரில் அலகாலம் வாழ்ந்திருந்த குலோத்துங்கன், ஆங்குத் தான் ஆற்றவேண்டிய அரும்பணி எதுவும் இல்லையாகவே வெற்றித் திருமகள் பால் மீண்டும் வேட்கை கொண்டு வீரத்திருவுலாவர வடநாடு நோக்கிச் சென்றுவிட்டான்.

குலோத்துங்கன், வடதிசை நாடுகளில் வாழ்ந்திருந்த காலை, சோனர்ட்டில் வீரராசேந்திரன் இறந்தவிட்டான். அவனுக்குப்பின், அவன் மகன் அதிராசேந்திரன் சோழர் அரியணையில் அமர்ந்தான்; ஆனால், ஆட்சியுரிமையை அவன் தானாகவே கைப்பற்றிக் கொண்டானல்லன்; மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தனின் துணை பெற்றே அவன் அதை அடைந்தான்; சோணாட்டு அரியணையில், அந்நாட்டை ஆண்டவன் மகன் அமர, அச்சோழர்க்குலப் பகைவேந்தனாகிய விக்கிரமாதித்தனின் துணைவேண்டியிருந்தமைக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. தலைமுறை தலைமுறையாக நடைபெற்றும், சோணாட்டுப் படையின் பெரும்பகுதியை அக்களத்தில் அழியவிட்டும் முடிவுகாணாப்பெரும் போரால் விளங்கிய மேலைச் சாளுக்கிய போருக்கு ஒரு முடிவுகாண விரும்பிய வீரராசேந்திரன், அச்சாளுக்கியர்குல இளவரசனாகிய விக்கிரமாதித்தனுக்குத் தன் மகள் ஒருத்தியை மணஞ் செய்துவைத்தான்; ஆகவே, அவ்விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனன் அதிராசேந்திரனை அரியணையில் அமர்த்துவதில் ஆர்வம் இருந்தது. அதிராசேந்திரன் அரியனை அமரச் சோணாட்டில் தடையெழாதிருந்திருப்பின், அதற்கு விக்கிரமாதித்தன் துணைவேண்டியிருக்காது, ஆங்குத் தடையெழுந்தமையினாலேயே, விக்கிரமாதித்தன் வந்து துணைபுரிய வேண்டியதாயிற்று. அதிராசேந்திரன் ஆட்சிபெற முடியாதவாறு முன்னின்று தடைசெய்தவர் யாவர் என்பது குறித்துச் சோழர் கல்வெட்டுக்களோ, அவர் மெய்க்கீர்த்திகளோ, விக்கிரமாதித்தன் அவைக் களப் புலவராகிய பில்ஹணர் எழுதிய விக்கிரமாதித்தன்