பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72

பில்ஹணர் வரலாற்றுச் செய்தி உண்மை அன்று; அது தன் பாட்டுடைத் தலைவனாகிய விக்கிரமாதித்தனைப் புகழ்ந்து கூறவந்த வெற்றுரையே என்பது புலனாம் எனக் காரணங்கள் காட்டி, அரசியல் கலகக் கூற்றை மறுக்கின்றார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.

தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவக்கரைச் சந்திர மெளனீசுவரர் திருக்கோயிலுக்குள் இருந்த வரத ராசப்பெருமாள் கோயில், கருங்கல் கோயிலாகக் கட்டப் பட்ட நிகழ்ச்சி, அதிராசேந்திரன் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது என்ற செய்தியொன்றே இவன் வைணவ சமயத்தை வெறுப்பவன் அல்லன் மாறாக அதன் வளர்ச்சிக்குத் துணைபுரிபவன் என்ற உண்மையை நிலைநாட்டும். மேலும், இராமாநுசர் அதிராசேந்திரனுக்கு மிக மிகப் பிற்பட்ட காலத்தவர் என்பதற்கும், சித்திரகூடத் திருமால் வடிவத்தைக் கடலில் எறிந்தவன் இரண்டாம் குலோத்துங்கனாவன் என்பதற்கும் நிறைய சான்றுகள் உள. ஆகவே, அதிராசேந்திரன், வைணவ சமய வெறுப்பின் காரணமாகவே கொலை செய்யப்பட்டான் என்பது அடிப்படையற்ற பொய்யல்லது மெய்யாகாது என்று கூறி அதிராசேந்திரனின் அக்குற்றச் சாட்டையும் மறுக்கிறார்கள் அவ்வரலாற்றாசிரியர்கள்.

சோணாட்டு அரியணைக்கு உரியாரைக் கொன்று விட்டு, அதைத் தான் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்து குலோத்துங்கனுக்கு இருந்திருந்தால், அதிராசேந்திரன் அரியணையேறும் அக்காலத்திலேயே, நாட்டில் கலகத்தியை மூட்டித் தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான். குலோத்துங்கனின், தகுதி திறமைகளை அறிந்திருந்த சோணாட்டு மக்களும் அவனுக்குத் துணை புரிந்திருப்பரேயல்லது தடைகூறியிருக்கமாட்டார்கள்; ஆனால் அவன் அப்போது அது செய்திலன்: செய்திருந்தால் அதிராசேந்திரன் உள்நாட்டுக் கலகத்தில் உயிர் துறந்தான் எனக் கூறும் வடமொழிப் புலவர், அக்