பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79

காவலன், அங்ஙனம் சென்ற சோழர் படைவாளா செல்லாது வழியிடை நகள்களாகிய மணலூரிலும், அளத்தியிலும், மேலைச்சளுக்கியர் படையை மடக்கி நிறுத்தி நிறுத்தி, மண்டமர் புரிந்து வெற்றி பல கண்டவாறே சென்றது; மைசூர்நாட்டு நவிலையிலும், அளத்தியிலும் விக்கிரமாதித்தன் நிறுத்தி வைத்த வேழப்படைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது, குலோத்துங்கன் நவிலையில் பெற்ற களிறுகள் மட்டும் ஆயிரத்துக்கு மேலாகும். இறுதியில் துங்கபத்திரைப் பேராற்றங்கரையில் நடைபெற்ற போரில், விக்கிரமாதித்தனும் அவன் தம்பியும் சோழர் படையின் எதிர் நிற்கமாட்டாது களம் விட்டகன்று கரந்து கொண்டனர்; இப்போர்களின் பயனாய்க் கங்க மண்டலமும், கொண் கானமும் குலோத்துங்கன் உடைமைகளாயின; இவ்வாறு மேலைச்சளுக்கிய நாட்டில் வெற்றி பெற்ற குலோத்துங்கன், ஆங்குத்தான் கைப்பற்றிய கணக்கிடமாட்டாக் களிறுகளோடும், பெரும் பொருட்குவியலோடும், எண்ணிலாப் பெண்களோடும், கங்கைகொண்ட சோழ புரம் வந்து சேர்ந்தான்.

பாண்டியரொடு மேற்கொண்ட போர்: தமிழரசர் மூவேந்தருள், பழமையானவர், தமிழ் வளர்த்தவர் என்றெல்லாம் பாராட்டப் பெறும் பெருமையுடையவர் பாண்டியர்; விசயாலயன் வழிவந்த சோழர் பேரரசு தோன்றுவதற்கு முன்னர்த் தமிழகத்தில் பேரரசு நடத்தியவர்கள்; அத்தகையர் பிறிதொரு பேரரசின் கீழ் அடங்கி வாழும் அடிமை வாழ்வை விரும்புவரோ? பராந்தகனும் இராசராசனும் அவர்களை வென்று, அவர்கள் நாட்டில் சோழ அரசை நிலைநாட்டினர் என்றாலும், பாண்டியர்கள் காலம் வாய்க்கும்போதெல்லாம் சோழ அரசை அழித்துத் தனியரசு பெறும் முயற்சியை விடாது மேற்கொண்டே வந்தனர்; அதனால் சோழ மன்னர்கள், பாண்டி நாட்டு மண்ணில் ஓயாயப்போர் மேற்கொண்டே