பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 8 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

'நீ பிரிந்தால், உன்னையே தனக்கு உயிரெனக் கொண்ட இவள்(தலைவி உயிர் நீப்பாள்" என்று யாங்கள் பலவற்றை எடுத்துச் சொல்லி வேண்டிக் கொள்ளவும், அங்ங்னம் வேண்டிக்கொண்ட எம்முடைய வார்த்தைகளை நீ கொள்ளாதவன் ஆயினாய்.

ஆயினும் நீ செல்லும் வழியில் நீர் இல்லாது வற்றிய சுனையில் இலைகளோடு கூடி வாடிய அழகிய மலர்கள் நினக்கு நின்னைப் பிரிந்து வாடும் தலைவியை நினைவூட்டும். தமக்குக் கொழு கொம்பெனத் தாம் கொண்டு தழுவிப்படர்ந்த மரம் வாட, அதிற் படர்ந்திருந்த பூங்கொடிகள் கீழே வீழ்ந்து கிடப்பன, அவை நின்னைக் கொழு கொம்பாகக் கொண்டிருந்த தலைவி நீ பிரியச் சோர்ந்து துணையின்றி வாடுதலை நினைவூட்டித் த்டை செய்யும். அம்மரத்தின் அழகு கெட அதனால் வாடிய தளிர்க்ளை காண்பாயாயின் அவை தினக்கு நின் பிரிவால் தன்னுடைய தளிர் மேனி வாடும் தலைவியை நினைவூட்டி தடைசெய்யும். கான வழியில் உனக்குத் தெரிகின்ற இக்காட்சிகள் தலைவியின் காதல் நினைவை உண்டாக்கத் தவறாதன. எனவே பிரிவை ஒழிக்க முயலுக" - . .

"உடையிவள் உயிர் வாழாள் நீ நீப்பின் எனப்பல விடைகொண்டு யாமிரப்பவும் எமகொள்ளாய் கடை இய ஆற் றிடை நீர்நீத்த வருஞ்சுனை அடையொடு வாடியஅணி மலர் தகைப்பன செல்லும் நீளாற்றிடைச் சேர்ந்தெழுந்தமரம் வாடப் புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடிய தகைப்பன றிடையம் துணிபுநீ செலக்கண்ட ஆற்மரத்து அணிசெல. வாடிய அந்தளிர் தகைப்பன

-பாலைக்கலி-2