பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 甘00 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் சூழ்ந்திருக்கும் அரக்கியர் துயில் வயப்பட்டு மயங்கிய பின்னர்தான் வெளிப்படலாம் என்று அவன் காத்திருந்தான். அதற்குள் பிராட்டி இராவணன் கொடுமை பொறுக்க மடியாமல் பல வகையாகக் கலங்கித் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துவிடுகிறாள். இதற்குள் சூழ இருந்த காவலரக்கியர் துயிலுற்று மயங்கினர். தான் செய்த முடிவுடன் தேவி ஒரு மாதவிப்புதரை அடையக் கண்ட அனுமன் இனியுங் காலந்தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்றெண்ணி அவள் முன் உயிரளிக்கத் தோன்றுவான் பே லத் தோன்றினான்

"அண்டர் நாயகன் அருள்துதன்

யான் எனாத் தொண்டைவாய் மயிலினைத்

தொழுது தோன்றினான்"

(உருக்காட்டுபடலம்) தொண்டை - கொல்வைக்கனி, மயில் - சீதை இராமபிரானுடைய தூதனே தான் என்றும் தேவியிருக்கும் இடம் அறியாமையினாலேயே அவர் நேரில் வரமுடியவில்லை என்றும் தன்னைப்பற்றி மனத்திற் சங்கை யுறலாகாது என்றும் அனுமன் தேவியிடம் வேண்டி வணங்கிக் கூறினான். நூற்றுப் பதினைந்திற்கு மிகுதியான பாடல்களைக் கொண்ட இந்த உருக்காட்டுபடலம் மேலும் இராமனுடைய அழகை அனுமன் வாயிலாகத் தேவி கேட்டறிதலும் கணையாழி பெறலும் அனுமனைப் பாராட்டலும் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. திருவடியிலிருந்து முடிவரை எம்பெருமானுடைய அழகை அனுமன் பிராட்டிக்குக் க்இlவது ஒன்றே இப்படலமும் சுந்தரகாண்டப் பெயர்ப் பொருள் விளக்கத்திற்குத் துண் போல அமைகின்ற சான்று தர ஏற்றதாகிறது."படிஎடுத்து உரைத்துக் காட்டும் படித்தன்று