பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 103 o' கோடி என்று கொடுத்தனள்

மெய்ப்புகழ் கொண்டாள்" கண்மணி - கண்ணிற்பாவை (88). நம்பன் - அனுமன், கோடி

கொள்வாயாக

என்று கம்பன், அனுமன் பிராட்டியிடமிருந்து சூளாமணி பெற்ற நிகழ்ச்சியைப் பாடியிருக்கிறான். இராவணனால் இலங்கை கொண்டுவரப் பெற்ற நாளிலிருந்து ஆடையில் முடிந்து வைத்திருந்த அம்மணியை மிகப்பெரிய நம்பிக்கையுடன் எம்பெருமானுக்கு அனுமன் மூலமாக அனுப்புகிறாள். அனுமன் சீதையிடம் விடைபெறும் போது பெற்றதாயைப் பிரிந்து வெகுதொலைவு செல்ல இருக்கும் மகன் போன்ற பாசஉணர்வை அடைகின்றான்.

"...வந்தித்து அழுது மும்மை வலங்கெடு இறைஞ்சினன் அன்போடு

எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால்” (89)

என்று அந்த அற்புதமான பாசஉணர்வு சுவை பிறழாமல் கூறப்படுகின்றது. முதலில் அனுமனைப் பற்றியே ஐயுற்ற சீதை அவனையே நம்பி இராமனுக்கு மணிகொடுத்தனுப்பும் அளவுக்கு அவன் சத்தியம் அவளுக்குத் தோற்றத்திலேயே புலப்பட்டது போலும்....? ஒரு சிறிய அழகிய படலமாகிய இதில் அனுமனின் பக்தியும், பிராட்டியின் நம்பிக்கையும் இரச செளந்தரியத்தோடு கூறப்படுதலால் இதுவும் காண்டப் பெயருக்கு ஏற்பவே அமைகிறது. -

அழிந்தது பூம்பொழில்

"சூளாமணியைப் பெற்று மீண்ட அனுமன் தான் வந்திருப்பதை இராவணனுக்கு எவ்வகையிலேனும் அறிவிக்கக் கருதினான்.