பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 104 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

ஒளிந்துவந்து மறைந்துமீள்வது ஆண்மைக்கு அழகன்றென்று கருதிய அவன் இவ்வாறு எண்ணியதில் வியப்பில்லை யல்லவா......? பிராட்டியைச் சிறை செய்து வைத்திருந்த அசோகவனத்தின் ஒரு பகுதியைச் சூறையாட அனுமனைத் துண்டியது இச்செயல் ஆவேசத்தோடு நினைவை ச் செயலாக்கத் தலைப்பட்டான். அசோகப் பூம்பொழில் அழியத்தொடங்கியது.

"இப்பொழி வினக்கடிது

இறுக்குவென் இறுத்தால் அப்பெரிய பூசல்செவி

சார்தலும் அரக்கர் வெப்புறு சினத்தர் எதிர்

மேல் வருவர் வந்தால் துப்புற முருக்கி

உயிருண்பல் இதுசூதால்

(பொழிவிறுத்தபடலம்-6) இறுக்குவென் - அழிப்பேன், பூசல்-ஆரவாரம், முருக்கி - கொன்று. சூது உபாயம் பேருருவங் கொண்டு அவன் இந்த அழிவு வேலையைச் செய்தான். வனப்பு மிக்க மரங்கள் பல வேரோடு வீழ்த்தப்பெற்றன. வானை அளாவி நின்ற பெரிய மரங்களுங்கூட இருந்த இடம் தெரியாமல் முறிந்தும் நெரிந்தும் தகர்ந்தன. சந்திரன் மறையவேண்டிய அளவு இரவுப்போது வளர்ந்திருந்தது. பொழுது விடிய இன்னும்சில் நாழிகைகளே இருந்தன. பூம்பொழில் முழுவதையும் அழித்தபின் நிற்கும் பரம்பொருளைப்போலவும், பதினான்கு உலகையும் அளந்தும் எஞ்சிய திருமாவின் திரிவிக்கிரமாவதாரத் தோற்றம் போலவும், நின்றான் அனுமன் செய்தி போது விடிந்ததும் அறிய நேர்ந்த பருவத் தேவர்களாலும் பிறராலும்