பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 十07 ふ

இராவணன் என்றும் காண முடியாதது கண்டான். கேட்க முடியாதது கேட்டான்.

"வீட்டியது அரக்கரை

என்னும் வெவ்வுரை கேட்டதோ கண்டதோ

கிளத்துவீர் என்றான்: (60) கிளத்துவீர்-சொல்லுவீர்

என்று கூறவந்தவர்களை நெருப்பால் எரிப்பதுபோலக் கேட்டான். இந்தப்படலம் வெறும் போர் நிகழ்ச்சியை மட்டுமே கூறினாலும் சுந்தரகாண்டமென்னும் பெயருக்கேற்ப மேற்படலத்தைப்போல அனுமனின் வீர செளந்தரியத்தையே விவரிக்கின்றது,

சம்புமாலி வதை! வியப்பும், ஆத்திரமும், ஒருங்கே துாண்ட இராவணன் "சம்புமாலி" என்னும் வல்லமையிற் சிறந்த வீரனை அழைத்து அனுமனைக் கயிறுகளால் பிணித்துக் கொண்டுவருமாறு கட்டளையிட்டு அனுப்புகிறான். படைகளின் பலவகைகளும் பின்தொடரச் சம்புமாலி அசோகவனத்தை நோக்கிப் புறப்பட்டான். அனுமன் அசோகவனத்தின் வாயிலில் இதை எதிர்பார்த்து நிற்பவன் போல நின்றான். கடலில் நடுவிலே கதிர்கள் விளிம்பிலிருந்து விரியத் தோன்றும் உதய சூரியனைப் போல இருந்தது அந்தத் தோற்றம். சம்புமாலி படைகளுடன் வருவது கண்டு தோள்கொட்டி ஆரவாரம் செய்தான் இராமதுரதன். அண்டங்கள் எல்லாம் அதிர்ந்தன.

“நின்றன திசைக்கண் வேழம் -

நெடுங்களிச் செருக்கு நீங்கத் தென்றிசை நமனும் உள்ளம் துணுக்கெனச் சித்திவானிற்

பொன்றலின் மீன்க னெல்லாம் பூவென உதிரப் பூவும்

குன்றமும் பிளக்க வேலை துளக்குறக் கொட்டினான் தோள்"

(சம்புமாலிவதைப் படலம் - 18)