பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி f09 &

பேராற்றலுக்கும் இழுக்கு" என்றனர். இராவணன் முதவில் அதற்குச் சம்மதிக்க மறுப்பது போல ஆத்திரமாக இருந்து பின் அவ்வாறே செய்யுமாறு பஞ்ச சேனாதிபதிகளுக்கு ஆக்ஞை யிடுகிறான். சேனாதிபதியர் ஆணையால் அங்கங்கேயிருந்த நால்வகைப் படைகளும் ஒன்று கூடின. ஐந்து பெருவீரரும் தலைமை ஏற்று நடத்த அப்பெரும் படைக்கடல் அனுமனை அடைந்தது. அனுமன் அலட்சியமாகத் தலை நிமிர்ந்து பார்த்தான்.

இவ்வகை ஐவரும்

எழுந்த தானையர் மொய் கிளர்தோரணம் அதனை முற்றினார் கையொடு கையுற

அணியுங் கட்டினார் ஐயனும் அவர்நிலை

அமையநோக்கினான்.

(பஞ்சசேனாபதிகள்வதை-25) தானை-படைகள், அணிகட்டுதல்-படைகளை அணிவகுத்தல் ஐயன்-அனுமன், அமைய-பொருந்த

அமைய என்ற சொல் அனுமனின் நுணுக்கமான திறமைக்குக் கொடுக்கப்படுகிற கம்பனின் பாராட்டு முத்திரை. நீண்டநேரம் இருதரப்பாரும் காண அஞ்சத்தக்க ப்ோரைச் செய்தனர். ஒவ்வொருவராக ஐந்து சேனாதிபதிகளும் தோற்று உயிர் விடுகின்றனர். அனுமனின் ஆற்றல் ஐந்து பெரும் படைத்தலைவர்களை வென்று உயிர்பறிக்கும் அளவிற்குச் சிறந்தது, என்பது இங்கே அறியத்தக்கது. செளந்தரியம்” சிருங்காரரசத்திற்கு மட்டும் உரியது என்று எண்ணுகின்றவர்கள் அதன் எல்லையைக் குறுக்கி விடுகிறார்கள். செளந்தரியம் வீரரசத்தில் பூரணமாக வேண்டியே இருக்கிறது. "சுந்தரகாண்டம், என்ற பெயருக்கு ஏற்ப இரண்டு வகையிலும் செளந்தரியத்தை ரசங்களோடு பொருத்தியிருக்கிறான் கம்பன். "கிங்கரர் வதைப்படலம்" முதல் அக்ககுமரன் வதைப்படலம் இறுதியாகவுள்ள நான்கு படலங்களிலும் "வீரரசத்தின் அழகு விளங்க அமைத்துள்ள கம்பனின் சாதுரியத்தைக் காண்கிறோ