பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 112 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

சூழ்போக்கி எல்லைகடக்க

விடுமீன்கள்

(பிணிவிடு பாடல்) என்னும் இராவணனுக்கு அனுமன் "கட்டு நகரைச் சூழ்போக்கிவிடுகிறான்.” “குரங்கின் வாலைத் தீயுண்ணச் செய்து நகரைச்சுற்றி அழைத்துச் செல்லுங்கள்" என்றபொருள் படும்படி இராவணன் தமருக்கு இட்டகட்டளையை அனுமன் இவ்வாறு இலங்கைநகரை எரிக்கும் ஆணையாகப் பொருள் கொள்ளவும் இடந்தருகிறது கம்பனின் சாதுரியமான பேச்சு. மேகம் வெம்மை யுற்றுக் கொதிப்படைந்துவிடும் போல அவ்வளவு வெய்யபுகைக்கற்றைகள் தீ நாக்குக்களிலிருந்து மேலெழுந்தன. இராவணன் மாளிகையில் தீப்பற்றும்படி செய்தான் அனுமன். இராவணனுக்குத் தன்னுடைய வீரத்தையே இகழும் படியான மிகுந்த சினம் தோன்றிவிடுகிறது. திசைகள் அதிர்ந்து நடுங்க வெடிச்சிரிப்புச் சிரித்தான்.

"இன்று புன் தொழிற் குரங்குதன்

வலியினால் இலங்கை நின்றுவெந்துமா நீறு எழு கின்றது

செந்தித் தின்று தேக்கிடு கின்றது தேவர்

கள் சிரிப்பார் - நன்று நன்று போர்வலி என இராவணன் நக்கான்"

(இலங்கை எரியூட்டுபடலம்-46) நீறு-சாம்பர், தேக்கிடுதல்-ஏப்பமிடுதல், நக்கான்-கோபச் சிரிப்புச் சிரித்தான்

அந்தச் சிரிப்பின் எதிரொலியாக மீண்டும் அனுமனைப் பிடித்துவருமாறு ஆட்கள் அனுப்பப்பெற்றனர். பிடிக்க வந்த பெரு வீரர்கள் ஒரே ஒரு மரத்தினால் அழித்து முடித்து விட்டான் அனுமன். சீதாபிராட்டி இருந்த அசோகவனம் ஒன்று தவிர மற்றையெல்லாம் அழிந்து தீப்பட்டிருந்தன. இறுதியாகத் தான் இலங்கையிலிருந்து செல்வதற்குள் பிராட்டியைத் தரிசிக்க நினைத்து அவ்வாறே கண்டுவணங்கிய பின்னர் விடைபெற்று மீள்கிறான் இராமதுாதன், இலங்கையில்