பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 113 ->

எரி சற்றே தணிந்தது. "அவிஞ்சையென்னும் பொய்யினை மெய்போல நடித்து'ச் செல்லும் அழகை அனுமனிடம் பார்த்தோம். இலங்கை எரியூட்டுபடலத்தில் ஆணவம் அழியும்போது பாவம் மடியும்போது-தோன்று சத்தியமயமான நேர்மையின் அழகு பூர்ணமாக இருக்கிறது. சுந்தரகாண்டம் என்னும் பெயர் பொருளை இவ்வகையால் இவைகளும் பினக்கின்றி விளக்கிக் காட்டுகின்றன. பாசப் படலம் பிரம்மாஸ்திரத்திற்கு மரியாதை கொடுக்கும் அனுமனின் பனிவழமைச் சொல்லும், திருவடி தொழுத படலமோ அழகுக் களஞ்சியமாகும். - -

உலகளந்த திருவடியில் கடல் கடந்த தூதன்

இலங்கையிலிருந்து புறப்பட்ட அனுமன் இடையே மைந்தாக மலையைக் கடந்து கடல் நடுவே கிடக்கத்தாவி மகேந்திரமலைக்கு வந்து சேர்ந்தான். குரங்கினத்தைச் சேர்ந்த வீரர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அங்கதனைப் போன்றவர்களைப் பணிந்து நிகழ்ந்தவற்றைக் கூறினான் அனுமன். பின்னர் கூட்டமாக இராமனுக்கு இந்தநல்ல செய்தியைக் கூறுவதற்காகப் புற்ப்பட்டனர். அந்தப்பயணத்தின் நடுவே மதுவனத்தில் ஒரு ஆரவாரக் கலவரம் நிகழ்ந்தது. அங்கே இராமனிருக்கும் இடத்திலோ நொடிக்கு நொடி கவலையில் ஆழும் எம்பெருமானாகிய அவனைச் சுக்கிரீவன் தேற்றிக் கொண்டிருந்தான். மதுவனத்தில் கலவரத்திற்கு ஆளாகி உடலிற் காயங்களோடு ததிமுகன் அப்போது வந்து சேர்ந்தான், ததிமுகன் கூறிய விவரங்களிலிருந்து அனுமன் நல்ல செய்தியோடு வந்திருக்கலாம் ஊகம் செய்து கொண்ட சுக்கிரீவன் "இது நன்மைக்கு அடையாள மாகுமென்று" இராமபிரானை நோக்கிச் சொன்னான். சற்று நேரத்தில் அனுமன் அங்கே தோன்றினான். சீதாதேவி இருந்த தென்திசை நோக்கி உச்சிமேல் கூப்பி யகையனாய் வணங்கிப் பின் இராமபிரானுடைய உலகளந்த திருவடிகளில் வீழ்ந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் கடல் கடந்த அந்தத் தூதன். அவன் செய்த சங்கேதத்தில் நன்மைகண்டு மகிழ்ந்தான் இராமபிரான். - -