பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

&

1

t

4.

கலித்தொகை பரிபாடல் காட்சிகள் "கண்டனன் கற்பினுக்கு

அணியைக் கண்களால் தெண்டிரை அலைகடல்

இலங்கைத் தென்னகர் அண்டர் நாயக! இனித்

தவிர்தி ஐயமும் பண்டுளதுயரும் என்று

அனுமன் பன்னுவான்"

(திருவடிதொழுத படலம்-58) என்று சொல்லின் செல்வனாகிய அனுமன் பூரீராமனுடைய மனச்சந்தேகங்களையெல்லாம் மாற்றவல்ல முறையில் தன் பேச்சைக் கூறுவதாகக் கம்பன் பாடியுள்ளான்.

'இற்பிறப்பு என்பது ஒன்றும்

இரும்பொறை என்பது ஒன்றும் கற்பெனும் பெயரது ஒன்றும்

களிநடம் புரியக்கண்டேன்" (62) என்று பிராட்டியின் பாதிவிரத்திய தர்மத்தின் திண்மையையும் செளந்தரியத்தையும் மேலும் பலவாறு கூறிப் பயபக்தியோடு சூளாமணியை எடுத்துக் கொடுக்கிறான் அனுமன். எம்பிரான் மகிழ்ச்சியடைந்து போருக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிடுகிறார். உருக்காட்டுபடலத்தில் அனுமன் பிராட்டியிடம் கணையாழியைக் கொடுத்தபோது எந்த ஒரு செளந்தரியத்தைக் கண்டோமோ அதே செளந்தரியம் இங்கே திருவடிதொழுத படலத்திலும் இணையற்ற சிறப்புடன் அமைந்திருக்கிறது. -

சுந்தரப் பெயரும் மந்திரக்கவிதையும்

..(இறுவாய்) ஆகச் சுந்தரகாண்டத்தின் பதினைந்து படலங்களும் இதுவரை மிகச்சுருங்கிய முறையில் விமர்சிக்கப்பட்டன. சுந்தரகாண்டம் என்ற பெயர்ப் பொருளாகிய செளந்தரிய இயைபு அந்தப் பதினைந்து படலங்களின் அமைப்பிலும் பொருளிலும் சம்பவத்திலும் அமைந்திருக்கக் கண்டோம். இராமாயணத்தின் காவிய குணம் சுந்தரகாண்டத்திலேதான் பொருந்தியிருக்கிற தென்று வெளிப்படையாக அறியலாம்.