பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 115 &

"பாவிகமென்பது காப்பியப்

பண்பே" (தண்டியலங்காரம்)

"விளம்பிய காப்பியக் குணங்கள்

பாவிகமே" (மாறனலங்காரம்) என்று அலங்கார நூல்கள் காவியத்தின் தொகுதியான குணத்தைப் பாவிகம் என்னும் அலங்காரமாகக் கூறுகின்றன. சுந்தரகாண்டத்திற்கு மேலேதான் இராம, இராவண யுத்தம் ஆரம்பமாகிறது. சத்தியத்துக்காகவும், நேர்மைக்காகவும், தர்மத்துக்காகவும் போராடிய போராட்டமே அந்த யுத்தம். யுத்தத்திற்கு முன்பு பிராட்டி இருக்கின்ற இடத்தை இலங்கையிலிருந்து விவரமாக அனுமன் வந்து உரைப்பது முதலிய நிகழ்ச்சிகள் சுந்தரகாண்டத்தைச் சேர்ந்தவை. எந்த சத்தியத்துக்காகவும் நியாயத்துக்காகவும் தர்மத்துக்காகவும் போர்நடக்கப்போகிறதோ அதே சத்திய நியாய தர்மங்களின் பூர்ண செளந்தரியத்தைச் சுந்தரகாண்டத்தில் வெளியிடை மலைபோல விளக்கமாக்கக் காண்கிறோம். கடல்தாவு படலம் முதல் திருவடி,தொழுதபடலம் இறுதியாக உள்ள பதினைந்து படலங்களுங்கூடிய ஆயிரத்து முந்நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளை உடைய தொகுதியே கம்பனுடைய சுந்தரப்பொழில் சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வோர் கவிதையும் மந்திர சக்தி வாய்ந்தது. தெய்வீக அழகும் ஆற்றலும் பொருந்தியது. சுந்தரகாண்டப் பாராயணம் வர்ப்பிரசாத பலன்

தரக்கூடியது.

புண்ணிய காலமாகிய தனுர் மாதத்தில் காலை நற்பொழுதில் எவ்வளவோ மகா செளந்தரியங்கள் நிறைந்து விளங்கும் இந்த சுந்தர காண்டத்தைப் படித்து மகிழ்வ்து கல்வியும் செல்வமும் தெய்வீக அருளும் தரவல்லதாகும். கம்பன், வால்மீகி, ஆகிய இரண்டு பெரியமகாகவிகளும் சுந்தரகாண்டம் என்ற இந்தப் பெயரை இதில் வரும் நிகழ்ச்சிகளிலும் கதைப் பகுதியிலும் உள்ளகடவுட்ட்ன்மை பொருந்திய அசாதாரண அழகு கருதியே இட்டிருக்க வேண்டும். இராமாயணம் ஒரு சுந்தரமான காவியமானாலும் அதிலும் சுந்தரம் மிகுந்து விளங்கும் இடம் சுந்தரகாண்டமே என்ற கருத்து இராமாயணத்தைப் பாடிய எல்லாக்