பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 117 や

சிருஷ்டிமனம்மாறாத தூய்மை அங்கே நின்று நிலவுகிறது. குழந்தையென்னும் நடமாடுங் கடவுளுக்குள்ளே தூய உள்ளமாகிய சிலை காட்சி கொடுக்கிறது. கழுத்தளவு பொய்மையிலே மூழ்கி விட்ட மனித உலகம் காணத்திறமற்ற ஒளிக்காட்சி குழந்தை உள்ளத்திலிருந்து கிளர்ந்து வீசுகிறது. அச்சத்தின் சாயை சிறிதளவும் அந்த உள்ளத்தில் நுழைவதில்லை. குழந்தையைப் பொருத்தமட்டில் ரப்பர் பாம்பும் உயிருள்ள பாம்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் அது அஞ்சுவதில்லை. இரண்டுடனும் அது விளைாடுகிறது. துரய்மையுடைய உள்ளம் காண்பதையெல்லாம் துய்மை மயமாகவே காண்கிறது. உருவத்தால் ஒப்புமைபெற்ற ரப்பர் பாம்பிற்கும், உருவம், செயல், படைப்பு, நச்சுப்பல் முதலிய எல்லாவற்றினாலும் தானேயாகிய பாம்பிற்கும், வேற்றும்ை காணமுடியாத நிலையில் விளங்குகிறது அந்தப் பளிங்கு உள்ளம். நெருப்பைத் தொட்டால் அது சுடும், கல்லைக் கடித்தால் அது பல்லை உடைக்கும். இவைகள் ஒன்றுமே அந்த உள்ளம் அறியாது. குழந்தை உள்ளம் வானவெளியில் உலாக் கொள்ளும் திங்களுடன் பேசவிரும்புகிறது. அம்புவி! அம்புலி! என்று தன் மழலைச் சொல்லால் அது திங்களை அழைக்கிறது. அம்புலி தன்னோடு பேசும் என்ற ஆவல் அந்த அழைப்பில் நிறைந்திருக்கிறது. அது பேசாத போது உள்ளம் அடைகின்ற ஏமாற்றம் மிகுதியாகிறது. நாளடைவில் அந்த ஏமாற்றம் ஆராய்ச்சியாக மாறுகிறது. - -

குழந்தை உள்ளம் முற்றத் தலைப்படுகிறது. 'அம்புலி பேசாது" என்ற முடிவு கிடைக்கிறது. உள்ளம் பகுத்தறியும் ஆற்றலைப் பெறுகிறது. கவிஞன் ஒருவன் ஒரு அழகான கவிதையிலே இதை வரைந்து காட்டுகிறான். குழந்தை உள்ளம் பரந்தகடலின் மேல் வெகுண்டு எழுவதையும், அதன் பயனாக அவர்கள் பேசுவதையும் கவி அமைத்துக் காட்டுகிறான். அந்த அமைப்பிவிருந்து குழந்தை உள்ளம் எத்தகையது என்பதை நாம் மறவாத முறையில் அறிந்து கொள்ள முடியும். அதிலுள்ள கவிச் சுவையையும் நுகரமுடியும். ஒரு கவிஞனை வழியிற் சந்தித்த மக்கள் சிலர் "ஐயா, உங்கள் ஊர் எது?” என்று கேட்கின்றனர். இந்தக் கேள்விக்குக் கவிஞன் என்ன பதில்