பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 10 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

"ஆள்பவர் கலக்குற அலை

பெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தோடு

பைதல் கொண்டமைவாளோ கல்லெனக் கவின் பெற்றறு விழ

வாற்றுப் படுத்த பின் புல்லென்ற களம் போலப்

புலம்பு கொண்டமைவாளோ ஒரிரா வைகலுள் தாமரைப்

பொய்கையுள் - நீர்நீத்த மலர்போல நீ நீப்பின்

வாழாதாள்” (அலை-துன்பம், பைதல்-பிரிவதற்துன்பம், அமைதல் - இருத்தல், கல்லென-கல்லென்று நிறைந்த் ஒலி கவின் அழகு, விழாவாற்றுப் படுதல்-விழாவை முடித்தல், புல்லென்றதனிமையெய்திய, புலம்பு - தனிமை, இராவைகல்-இராப் போழ்து) -

இக்காட்சியுள் தலைவியின் நிலைக்குத் தோழி கூறும் 'கொடுங்கோல் வேந்தனின் குடிகள்' என்பது. இங்கு அமைந்தமைக்கு காரணம். இதைப் பாடிய சேர அரசன் கடுங்கோல் ஒரு செங்கோல் வேந்த னாதலின் எனபது. செங்கோன்மையிற் பழகினாரே அதன் மறுதலையான ஒன்றின் இழியை நன்றாக உணர்ந்தது பாட முடியும். - துன்பந் தொவைக்கும் இன்பத் துணை இனி தலைவி தானே தலைவனுடன் வரப்போவதாகப் புறப்பட்டு விடுகிறாள். அரிய காட்டு வழியில் நீர் அனுபவிக்கும் துன்பத்திற்குத் துணையாக வருவதன்றி எனக்கு வேறுஇன்பமும் உண்டோ? எனத் தல்ைவி அவனை வினவுகிறாள். தலைவனை நோக்கித் தலைவி கூறும் சொற்களில் பெண்மையின் ஆர்வத்தைக் காண முடிகிறது. பெண்மையின் அஞ்சாமையைக் காணமுடிகிறது. காதல் உலகத்தின் தியாக எண்னத்தையும் திண்மையையும் காண முடிகிறது தலைவி கூறுகிறாள்: -