பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 118 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

சொல்லியிருக்க வேண்டும்? . இதுதான் எனது ஊர் என்று தனது ஊரின் பெயரைக் குறிப்பிட்டுப் பதில் கூறியிருக்க வேண்டும். ஆனால் அந்தக் கவிஞன் "இத்தகைய குழந்தை உள்ளம் படைத்தவர் வாழ்வதால் இன்ன நிகழ்ச்சிகள் நிகழுந்தன்மையது எம்மூர்" என்று அந்தக் கவிதையை ஒரு அழகிய காட்சியை ஓவியமாக எழுதிக் காட்டும் போது சுவைமிக்க செய்யுளின் தோற்றத்திற்கு அது ஒரு எடுத்துக் காட்டாக அமைகிறது. ஒரு சிறந்த கவியுள்ளம் தனது அகக் கண் முன் ஒரு காட்சியை பழ நினைவுகொண்டு அமைப்பதிலுள்ள நயம் அங்குப் பொலிகிறது. கேள்விக்குக் கவிஞன் பதில் கூறுகிறான்:

கடல் தனது அலைக்கரங்க்ளால் இசையொலி எழுப்பி விளையாடும் அழகிய கடற்கரை, குழந்தையுள்ளம் படைத்த இளம் மகளிர் கூட்டம் கூட்டமாகக் கடற்கரை மணலிற் சிறுசிறு வீடுகள் கட்டி விளையாடுகின்றனர். அதில் அவர்களுக்கு ஒரு தனி இன்பம். கடற்கரை மணலில் அவர்கள் கை வண்மையாற் கட்டும் சிற்றில்களைக் கண்டு அவர்களுக்கே ஒரு பெருமிதம் பாய்ந்துவரும் ஒசைமிக்க கடல் அலைகளுக்கு மகிழும் குழந்தையுள்ளத்தை வருத்தவேண்டுமென்ற எண்ணமோ என்னவோ? ஆர்கலித்துவந்த பேரலையொன்று அவர்களுடைய மணற்சிறுவீடுகளை மூழ்கஅடித்துச் சென்று விட்டது. இளம் உள்ளத்திற்குத் தனது ஆக்கம் அழிவதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. கைவருந்தக் கட்டிய வீடு கடலலைக்குப்பலியாவது கண்டு துடித்தது குழந்தையுள்ளம். கடலின் மேற் கோபம் எழுந்தது. "கடலே! கடலே! இரு இரு உன்னை என்ன செய்கிறேன் பார்! நீ செய்ததை என் அன்னையிடம் சொல்லிவிடப் போகிறேன். உன்னைச் சும்மா விடப்போவதில்லை! தெரிந்து கொள்" என்று அந்த இளம்மகளிர் வாய்கள் அலறுகின்றன. அதோடு நிற்கவில்லை அவர்கள் சினம். அன்னையிடம் கடலைச் சொல்லிக் கொடுப்பதற்காக வீட்டிற்கே கிளம்பி விட்டார்கள் அவர்கள். வீட்டை நோக்கி வேகமாக வருகின்றன சின்னஞ்சிறுகால்கள். நினைக்க நினைக்க அவர்களுக்கு இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. . .