பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 19 శ• கடவின் மேல் வந்த சினம் தங்கள் மேலேயே திரும்புகிறது. தங்கள் கழுத்திலிருந்த முத்துமாலையை அறுத்தெறிகிறது அவர்கள் கை. சிதறி விழுந்த முத்துக்கள் மண் முழுதும் ஒளிவிளக் கேற்றுகின்றன. குழந்தையுள்ளத்தில் எழுகின்ற கோபம் முற்றும் போது அது தன் மேலேயே திரும்புகிறது. அப்போது அது தன்னையே வருந்திக்கொள்கிறது. பாதையெல்லாம் இவர்கள் அறுத்தெரிந்த முத்துக்கள் பரந்து கிடக்கின்றன. பாதை வழியாகப் போவார் வருவோரையெல்லாம் இவைகள் புன்னையரும்புகளோ? அன்றி முத்துக்களோ? என்றும் மயங்கச் செய்கிறது, இவர்கள் செய்த செயல். பாதையிற் போவோர் வருவோர் புத்தி தடுமாறுகிறது. அப்படிப்பட்ட இயற்கைவளம் வாய்ந்த காவிரிப்பூம்பட்டினமே எனது ஊர் என்று கூறிமுடிக்கிறான் கவிஞன்

“முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோதம் மூழ்கிப் போக அன்னைக் குரைப்பனறிவாய்

கடலேயென் றலறிப் பேருந் தன்மை மடவார் தளர்ந்து குத்த

வெண்முத்தம் தயங்குகானற் புன்னையரும் பேய்ப்பப்

போவாரைப்பேதுனுக்கும்

புகாரே எம்மூர் முதலிரண்டு அடிகளில் குழந்தை உள்ளத்தில் எழுகின்ற சினத்தை அழகான முறையில் ஒசை நயத் தோடு அமைத்துள்ளான் கவிஞன். பிற்காலத்திலே உண்மையிலேயே மனைவிளக்காக இருந்து இல்வாழ்க்கையாகிய வீட்டைக் கட்டப்போகின்ற இளம் பருவத்து மகளிர்க்குத் தாம் கட்டிய மணற்சிறு வீடுகளின் மீது உரிமையுணர்வை இந்தக் கவிதையிற் காணமுடிகிறது.

அன்னையிடம் சொல்லிவிட்டால் கடல் சரியான தண்டனையைப் பெற்றே தீரும் என்ற குழந்தையுள்ளத்தின் நம்பிக்கை பாட்டில் இயைந்து நிற்கிறது. ஏமாற்றத்தின் காரணமாக எழுகின்ற கோபம் என்ன முடிவை அடைகிறது?