பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 * உண்ணுவதற்கு நீரின்றி வறப்பப் புலர்ந்து வாடிய நாவிற்குத் தண்ணீர் பெற முடியாது தடுமாற்ற மெய்திப் போக்குதற்கு அரிய துயரத்தை யெய்திக் கண்ணிர் சிந்தி அந் நாவினை நனைக்க வேண்டிய நிலையிற் கடுமைகளையுடையது. காடென்று நீர் நான் உம்முடன் வருதலை மறுத்துக் கூறினால் எனது உயிர் தாங்கியிருத்தலை யாற்றாது இறந்து படுதலை அறியாதவர் போல, மறுப்பான இம்மொழிகளை கூறுதலாற் பெற்றது யாது? நெடுந்தகையோனே! இவ்வார்த்தைகள் நின்னுடைய தூய நீர்மைக்குப் பொருந்துவனவல்ல. நீ எம்மிடத்து அன்பற்றுப் பிரிதல் கூடாது. கடுமையான காட்டு வழியில் உமது துன்பங்களைத் துணையாக நாடித் தொலைக்கும் அச் செயலல்லது எனக்குப்பிறிதோர்.இன்பமுண்டோ? துன்பத் தொலைக்கும் இன்பத் துணையாக எம்மையும் உடன் அழைத்துச் செல்வாயாக.

'உண்ணிர் வறப்பப்

புலர்வாடு நாவிற்குத் தண்ணிர் பெறா அத்

தடுமாற்றருந்துயரங் கண்ணiர் ந்னைக்குங்

கடுமைய காடென்றால் என்னிர் அறியாதீர்

போல இவை கூறின் நின்னிர வல்ல -

நெடுந்த காய் எம்மையும் அன்பறச் சூழாதே

யாற்றிடை தும்மொடு துன்பந் துணையாக

நாடின் அது வல்லது இன்பம் உண்டோ எமக்கு” (உண்ணிர் - உண்ணும்நீர் வறப்ப-வற்றிப்போக, புலர்வா. நாபுலர்ந்து வாடுகின்ற நா என்னிரறியா தீர்போல - நீர் பிரியின் உயிர் போகும் எனது நீர்மையை அறியாதவர் போல, நின்னீர் - நின்னுடைய பண்புகள் சூழாதே கருதாதே)