பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 13 * பிரியுங்காற் பிறரெள்ளப்

பீடின்றிப் புறமாறும் திருவினும் நிலையிலாப்

பொருளையும் நச்சுபவோ? புரைதவப்பய னோக்கார்

தம்மாக்கம் முயல்வாரை வரைவின்றிச் சேறும் பொழுதிற்

கண்ணோட்ா துயிர்வவ்வும் அரைசினும் நிலையிலாப்

பொருளையும் நச்சுபவோ?

(மரீஇ - மருவி, பீடின்றி - பெருமையின்றி, புறமாறும் . நீங்கும், நச்சுபவோ - விரும்புவார்களோ, புரைதவ - பெருமைமிக, ஆக்கம் - செல்வம்)

இக்காட்சியில் பொருளின் பொது இயல்புகளையும், அதனால் விளையும் ஒரு சில கேடுகளையும் தோழி அழகாக எடுத்துத் தலைவனுக்கு உரைத்து, அவன் மனம் மாறும்படி செய்து அவன் தலைவியோடு உடன் போக்கு மேற்கொள்ளுதற்கு ஊக்குகின்றாள். தோழியின் பொருளாதார ஆராய்ச்சியை நாம் வியக்க வேண்டி இருக்கிறது. அதோடு தலைவன் மனமும் மாறத் தொடங்குகிறது.

பெற்ற உரிமையும் உற்ற பயனும்

தலைவன், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு தலைவியுடன் உடன் போக்காகச் செல்லுதற்கு ஒப்புக்கொண்டு விடுகிறான். தோழி தனது சொல்வன்மை வெற்றி பெற்றமைக்காக மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளுகிறாள். அவனும் அவளும் உடன் போக்காகச் சென்று விடுகிறார்கள். தன்மகள் அவள் காதலுக்குரிய ஆண் மகனொருவனோடு உடன்போனதைச் செவிலித்தாய் அறிந்து கொள்ளுகிறாள். தான் பெற்ற உரிமையாகிய தன் மகள் பருவம் வந்ததும் பிறள் மகன் ஒருவனுக்குப் பயனுற்றுவிட்டதை அவளாற் பொறுக்க முடியவில்லை. தன் மகளும் அவனும் சென்ற வழியே பின் தேடிச்செல்லுகிறாள் செவிலித்தாய், அங்ஙனம் பின் தேடிச் சென்ற செவிலி, எதிரே சில அந்தணர்களைச் சந்திக்கிறாள். அவர்களிடம் "என் மகள்