பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 15 & யாழ்க்கவைதாமென் செய்யும் சூழுல்கால் நும்மகள் துமக்கும் ஆங்கு அனையளே” (படுப்பவர் பூசிக்கொள்வார், சாந்தம் - சந்தனமரம், சீர்கெழு - பெருமை பொருந்திய, நீர் - (இங்கே கடல், ஏழ்புணர்-ஏழு நரம்புகள், முரல்பவர் படுபவர், சூழுங்கால் - ஆராயுமிடத்து.

உரிமையும் பயனும் வேறுபடுவதைத் தத்துவ ரீதியாக விளக்குகிறது. இக்காட்சி

வாடிய மலர்

உடன் போனவர்கள் திரும்புகின்றனர். திருமணம் செய்துகொண்டு இன்புற்று வாழ்கின்றனர். இப்படிச் நாட்கள் கழிகின்றன. தலைவன் மீண்டும் பிரிய நேரிடுகிறது. அகவாழ்வில் இன்ப ஈடுபாடுடைய தலைமகன் புற வாழ்க்கையிலும் தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறதே. அதற்காகவே பிரிவு நேரிடுகிறது. தலைவிக்கு அப்பிரிவை ஆற்றிக் கொள்ளும் வன்மை சிறிதும் இல்லை. யானும் உடன் வருவேன் என்று வற்புறுத்திக் கூறுகிறாள்.

தான் உடன் வருவதன் இன்றியமையாமைக்கு அவள் கூறுங் காரணங்கள் மிகப் பொருத்தமாக இருக்கின்றன. பிரிந்தவர்கள் இன்ன இன்ன பொருள்கள் போல இன்ன இன்ன துன்பங்கள் எய்துகின்றனர். யானும் அத் துன்பங்களை எய்தி ஆற்றியிருக்க முடியாது. ஆதலால், நின்னைப்பிரிந்து "வாடிய மலர்" போல யான் இருக்க விரும்பவில்லை. நின்னுடனேயே வருவேன் என்கிறாள். தலைவி அவளிடம் கூறுகிறாள்.

"தோளின் நலத்தைப் பலமுறை நுகர்ந்து தம் கணவரால் துறக்கப்பட்ட மகளிர், நீருண்ணும் வேட்கையாலே நீர் குடித்த பின்னர் எச்சிலாக்கி அப்புறம் எறிகின்ற பனை ஒலையாற் செய்த தொன்னையை ஒப்பர்.

“தம்மனம் விரும்பிய கணவர் நலம் நுகர்ந்து பின் தனியே விடப்பட்டுப் பிரிவெய்திய மகளிர், குடியிருப்பேரெல்லாம் வேறோரிடம் போகப் பாழ்படும் ஊரை ஒப்பார்"