பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$

16 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

தம் மனம் விரும்பிய கணவர் இன்புற்றுத்தனியே இருக்கப் பின் பிரிவெய்திய மகளிர், வனப்பும் செவ்வியுமுள்ளபோது கூந்தலிற் சூடிப் பின் வாடிய மலரான காலையில் தூர எறியும் நிலையை ஒப்பர். இதை நீர் நன்றாகச் சிந்தித்துப் பாரும். நானும் அத்தகைய வாடிய மலராக ஆக வேண்டுமோ?

"தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள்நீர் உண்ட

குடையோ ரன்னர் நல்கு நர் புரிந்த நலன்

உனப் பட்டோர் அல்குர் போகிய

ஊரோ ரன்னர் கூடினர் புரிந்து

குணனுணப்பட்டோர் சூடினர் இட்ட

பூ வோ ரன்னர்" (துறக்கப்பட்டோர் - பிரியப்பட்டோர்; வேள்நீர்- வேட்டநீர்; குடை-பனை ஓலையாற் செய்த தொன்னை நல்குநர்-காதலர்; அல் குநர் - வசிப்பவர் ; சூடினர் - பூ வை ய னி ந் தோர் ; குணன்-இன்பச்செல்வி)

இக்காட்சியில், தலைவனுக்குத் தனது பிரிவாற்றலருமையை

எடுத்துக் காட்டுக்களோடு மறுக்க முடியாத முறையில் வழங்குகிறாள் தலைமகள். -

இளவேனில் வந்தது தலைவி தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தலைவன் கேட்கவில்லை. அவன் பிரிந்து சென்று விட்டான். நாட்கள் கழிந்தன. தலைவியும் எப்படியோ அவன் பிரிவை ஆற்றிவருகிறாள். ஆனால் இதோ அழகிய இளவேனிற்காலம் வந்துவிட்டது. இளவேனிற் காலத்துக் காட்சிகள் ஒவ்வொன்றும் அவளுக்குத் தலைவனை நினைவூட்டுகின்றன.