பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17 &

அந்நினைவு அவளை மிகவும் வருத்துகிறது. தலைவியின் வருத்தத்தைக் கண்டு தோழி "இத்தகைய எழில் நலம் மிக்க இளவேனில் காலமும் வந்தது. ஆனால் பிரிந்து சென்ற தலைவர் இன்னும் வரவில்லை" என்று கூறுகின்றாள்.

தோழியின் இளவேனில் வருணனை:

"கொடுமையும் வலிமையும் உடைய கலப்பையையுடைய பலராமன் அணிந்த மாலையைப் போன்ற அழகிய வெண் கடம்ப மரத்தின் உயர்ந்த கிளையில் அழகிய மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. யாழில் உள்ள நரம்புகள் இன்னிசை எழுப்புவது போல் வண்டுகளின் கூட்டம் ரீங்காரம் செய்கிறது. கையிலே வளை களையணிந்த பெண் வீணை வாசிக்கும்போது வினையொலியும் வளைகளின் ஒலியும் ஒருங்கே ஒலிப்பது போலத் தும்பிகள் ஒலி செய்கின்றன. குளங்களினையுடைய சோலைகளுள்ளே மலர்ந்த மலர்களை நோக்கி வண்டுகள் தேனுண்ண ஊதுகின்றன. மரங்கள் தோறும் கொத்துக் கொத்தாய் அலர்ந்துள்ள மலர்கள் போவோர் வருவோரைத் தம்மைக் கொய்ய அழைப்பன போன்று இருந்தன. கரியகுயில்கள் இசை பாடின. பெரிய நீர்த்துறைகள் ஆடுவோர் மிகுந்தமையாற் கவின் பெற்றன. இளவேனில் திருவிழா எதிர்த்து வந்தது. சீர்மை பொருந்திய காலம் இந்த இளவேனில். ஆனால் காதலர் இன்னும் வரவில்லை.

"கொடுமிடல் நாஞ்சிலான் தார் போல் மராஅத்து நெடுமிசைச் சுழுமயில்

ஆலும் சீர வடிநரம்பு இசைப்ப போல்

வண்டொடு சுரும்பு ஆர்ப்பத்

தொடிமகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர இயன் எழி இயவை போல எவ்வாயும் இம் எனக்

க.கா.2