பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 甘8

கயனணி பொதும் பருள் கடிமலர்த் தேனுரத (மலராய்ந்து

வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப இருங்குயில்

ஆலப் பெருந்துறை கவின் பெறக்

குழவி வேனில் விழவெதிர் கொள்ளும் சீரார் செவ்வியும் வந்தன்று r

வாரார் தோழி நம் காத லோறே

(மிடல் - வலிமை, தார் - மாலை, நாஞ்சில் - கலப்பை, மராஅத்து - மரத்தில், நெடுமிசை உயர்ந்த கிளையில், ஆலும் - ஆடும், வடிநரம்பு - வடித்த நரம்புகள், வண்டு ஆண்வண்டு, கரும்பு - பெண்வண்டு, தொடி மகள் - வளையணிந்த பாடகி, பொதும்பர் - சோலை, முரற்சி - ஒலி, ஊழ்ப்ப - மலர, செவ்வி - காலம்)

இக்காட்சியில் இன்பநினைவு ஊட்டும் இளவேனிலை தோழி சித்திரமாக வரைந்து வருணிக்கிறாள். அதில் அழகு தோற்றம் பெறுகிறது.

ಅಣಿಟ್ರಿಕೆä 56ರಿ

குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும். அவைகளை நிலமாகக்கொண்டு நிகழுங் காதல் நிகழ்ச்சிகள் இத்திணையில் இடம் பெறும். காதலின் தோற்றத்திற்கும் படிப்படியான வளர்ச்சிக்கும் இது நிலைக்களனாக அமைகிறது. அழகும் நலனும், ஒருங்கே வாய்க்கப் பெற்ற மகள் ஒருத்தியும் மகன் ஒருவனும் முதல் முதலிற் சந்திக்கும்போது தோன்றும் உணர்ச்சியே காதல், அங்ங்ணம் சந்திக்கும் ஒருத்தியும் ஒருவனும் நடத்தும் காதல் நாடகத்தை கலித்தொகை ஓவியமொன்று காட்டுகிறது. X