பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ 20

கலித்தொகை பரிபாடல் காட்சிகள்


பொய்யாக வீழ்ந்தே னவன்
மார்பின் வாயாச் செத்
தொய்யென வாங்கே எடுத்
தனன் கொண்டான் மேல்
மெய்யறியா தேன்போற்
கிடந்தேன் மன்னாயிடை
மெய்யறிந் தேற்றெழுவே
னாயின்மற் றொய்யென
ஒண்குழாய் செல்கெனக்
கூறி விடும்பண் பின்
நின்கண் உடையன்
அவன்

(குறிஞ்சிக்கலி)

(ஏனல் - தினைப்புனம் ஊக்கி-ஆட்டுவாயாக தையால் - பெண்ணே கைநெகிழ்பு-கைதவறி, ஒய்யென-விரைவாக, ஆயிடை அவ்விடத்து ஒண் குழாய்-ஒளியான குழையாய்)

இதனுள் முதற்காதலில் நிகழும் ஒரு நடிப்புக் காட்சி தெரிகிறது.

கள்வன் மகன்

அவளது இளமை தொட்டே அவன் அவளுக்குக் காதலன், இளமையில் அவள் தெருவில் விளையாடும் போது அவள் கட்டிய மணற்சிறு வீடுகளை அவன் காலால் அழிப்பான். அப்படிப்பட்ட அவன் (பின்னொரு காலத்து) அவள் பருவமடைந்த காலத்து, அவளும் அவள் தாயும் வீட்டிலி ருக்கும்போது வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தண்ணீர் கொணர்ந்த அவள் கையைப் பிடித்துவிட்டான். அதோடு போகவில்லை; அவளது உள்ளத்தையும் திருடிக்கொண்டு போய்விட்டான் அந்தக் "கள்வன் மகன் இந்த நிகழ்ச்சியைத் தலைவியே தோழிக்குக் கூறுகிறாள் : "ஒளிபொருந்திய வளைகளை அணிந்த, தோழி கேட்பாயாக தெருவில் நாம் மணற்சிறுவீடு செய்து விளையாடுங்காலத்து, அவைகளைக் காலால் அழித்து நமது கூந்தலிலே அணிந்த பூப்பந்தை