பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

நா. பார்த்தசாரதி 21 or அறுத்துக்கொண்டு ஒடி நாம் வருந்தத்தக்கனவற்றைச் செய்யும் சிறியோன். முன்னொரு நாளில், நானும் தாயும் வீட்டிவி ருக்கும்போது வந்தான்.

இவ்வீட்டில் வசிக்கின்றவர்களே, பருகநீர் வேண்டுமென்றான். அதுகேட்ட என் தாய் என்னை அவனுக்குப் பொன்னாற் செய்யப்பட்ட குவளையில் நீர்கொண்டுபோய் நீர் உண்ணப் பண்ணு" என்றாள். யானும் அவன் நமது பழைய வீடுகளை அழித்தவன் என்று அறியாதே உண்ணும் நீர் கொண்டு சென்றேன். அங்ஙனம் நீர்கொண்டு சென்ற என் வளையணிந்த முன் கைகளை அவன் பற்றினான். அதுகண்டு யான் திடுக்கிட்டு "அம்மா இதோ இவன் என்ன செய்கிறான் பார்?" என்று என் அன்னையைக் கூவினேன். உடனே அன்னை அலறி ஓடி வந்தாள். யான் அவன் செய்த தை மறைத்து அன்னை யிடம்,நீர் உண்ணும்போது விக்கி வருந்தினான் என்றேன். நான் சொன்னது பொய்தான். தாய் உடனே அவன் முதுகைத் தடவி விக்குள் தனித்தனள். அதன்பின் அக் "கள்வன் மகன்” என்னைத் தன் கடைக் கண்களால் நோக்கி நகைசெய்தான். உள்ளம் திருடப்பட்டுவிட்டது.

"சுடர்த் தொடீ கேளாய்

தெருவில் நாமாடும் மணற் சிற்றில் தாவிற்

சிதையா அடைச்சிய கோதை வரிப்பந்து

பரிந்து கொண்டோடி நோதக்க செய்யுங்

சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும்

இருந்தேமா வில்லிரே உண்ணுநீர் வேட்டேன்

எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தர்ல் வாக்கிச் சுடரிழாய் உண்ணு நீர் ஊட்டிவா