பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 22 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

வென்றாள் எனயானும் தன்னையறியாது

சென்றேன் மற்றென்னை வளைமுன்கை பற்றி

நலியத் தெருமந்திட்டு அன்னாய் இவனொருவன்

செய்தது காண் என்றேனா அன்னை அலறிப்

படர்தரத் தன்னையான் உண்ணு நீர் விக்கினா

னென்றென அன்னையுந் தன்னைப் புறம்பழித்து

நீவமற் றென்னைக் கடைக்கண்ணாற் கொல்வான் போல்நோக்கி நகைக் கூட்டம்

செய்தான் அக்கள்வன் மகன்"

(குறிஞ்சிக்கலி) (தொடி-வளையல் சிதையா-சிதைத்து அடைச்சிய-சூடிய, பரிந்து-அறுத்து நோதக்க-வருந்தத்தக்கன சிறிபட்டி - விடலைச் சிறுவன்; சிரகம் - ஒருவகைக் கோப்பை, நலிய - வருந்த; புறம்பழித்து - முதுகிற்றடவி , நீவ தடவ) -

காதலின் எழுந்த பாராட்டு

தலைவன் தலைவியைப் பாராட்டுகிறான்.அவள்மேல் அவனுக்குள்ள அளவு கடந்த காதல் அவனைப் பாராட்டச் செய்கிறது. தலைவி அப்பாராட்டுதல்களாலே ஒரு தனிப் பெருமை எய்துகிறாள். ஆனால் பெண்மைக்கு இயல்பாகிய நாணம் அப்போதும் அவளிடம் எழுந்து ஒளிரவே செய்கிறது. தலைவன் தன்னைப் பாராட்டியதை அவள் தோழியிடம் தானே. கூறித் தனது நாணத்தின் பெருமையையும் எடுத்துரைத்து விளக்குகிறாள். இதோ தலைவி கூறுகிறாள் : “அழகிய நெற்றியையுடைய தோழி! யான் இப்போது உன்னிடம் ஒரு செய்தியைக் கூறப்போகிறேன்; அதைக் கேட்பாயாக, ஒருநாள்