பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 24 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் வேயமன்றென்று

மலையும் அன்று பூவமன்றன்று

சுனையுமன்று மெல்லஇயலும்

மயிலும் அன்று சொல்லத் தளருங் கிளியுமன்று என்வாங்கு அனையன

பல பாராட்டி

(குறிஞ்சிக்கலி) துதல்-நெற்றி இயல்-சாயல்; நோக்கு பு-பார்த்து, நினைஇ-எண்ணி, ஐ-வியப்பு: மை-களங்கம்: வேய்-மூங்கில்; அமன்று - தோன்றி தளரும்-தளர்வெய்தும்

(இதனுள் தலைவன் தலைவியைப் பாராட்டும் பாராட்டில் காதல் எழுந்து விளக்கம் பெறுகிறது)

ஊரின் நடுவில் ஒர் அழகிய பூங்சோலை. ஒருநாள் ஒர் இளைஞன் அந்தப் பூங்சோலைக்குச் செல்லுகிறான். சோலையைச் சுற்றிப்பார்க்கிறான். ஒரிடத்திற்கு வந்ததும் திடீரெனப் பிரமித்து நின்று விடுகிறான். தழைத்து வளர்ந்து பூத்துக்குலுங்கும் ஒரு புன்னை மரத்தடியில் பூங்கொடி யொருத்தி நிற்கிறாள். காளை அவளைக் கண்டான். காதல் வேகத்தில் பிதற்றத் தொடங்கிவிட்டான் : "ஊரின் நடுவிலே வளர்ந்த பூங்காவினுள்ளே நீர் ஓடுகின்ற சிறிய வாய்க்காலின் அருகே ஒரு புன்னைமரம், பரந்த நிழலும் அலர்ந்து முதிர்ந்த பூக்களைப் பறித்துக்கொண்டு நின்றாள் ஒரு பெண்கொடி வாரி முடித்திருந்த அவளுடைய கரிய கூந்தல் நெகிழ்ந்து தோளிலே புரண்டுகொண்டிருந்தது. பூரண சந்திரன் தனது இனிய கதிர்களைப் பரப்பினாற்போல ஒளிபரப்பிக் கொண்டிருந்தது அவளுடைய முகம்.

அவள் என்னை நோக்கி வந்தாள். யான் இவ்வண்ணம் இங்கே வரும் இவள் யார் என்று ஐயுற்றேன்? இம்மலையிலே உள்ள