பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 28 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

அவன் நீங்கினால் எம்முடைய பொன்போலும் தோள்கள்.வாடும். வாட்டங்கண்டு ஊரவர் வம்பு பேசுவர். அதுகண்டு யான் அளப்பரிய பெருந்துன்பமுற்று அவனை முன்போலத் தழுவி முற்றும் மகிழ்வெய்தக் காத்திருப்பேன். அவன் வருவான், நான் மனமகிழ்த்து தழுவுவேன்.ஆனால் அவன் மனத்தோடு பொருந்தாது பொய்யாகத் தழுவுவது போல நடிப்பான்.அதைக் கண்டு என்னுள்ளம் அல்லலுறும். அங்கனம் அவன் போவியாகத் தழுவும் பொய்மையில் யான் இன்பம் என்பதையே காண்முடியவில்லை. அது கனவிற் பெற்ற செல்வம்போலக் கணப்பொழுதில் மறைந்து விடுதிமியல்பினது. உடுத்த உடையும் இருக்க இடமும், உண்ண உணவும் அற்ற ஏழையொருவன் ஒரு நாளிரவு கனவில் பொன்னும் மணியும் முத்தும் குவித்த செல்வக் குவியலுக்கு உடையவனாகி விட்டதாகக் கனவு காண்கிறான். அதனாற் பயன்? எழுத்தான், விழித்தான். ஏமாந்தான். அதுபோலத்தான் எனக்கும் தலைவனது போலித் தழுவுதல் பொய்மையாகத் தோன்றுகிறது.

"நனவினான் வேறாகும் வேளா முயக்கம் மனவரிற் பெற்றுவந்து

மற்றெந் தோள் வாட இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்றாங்குக் கனவினான் எய்திய

செல்வத் தனையதே ஐய எமக்குநின்மார்பு - (கலித்தொகை : மருதம்) நனவு-விழிப்பு: நிகழ்ச்சி, முயக்கம்-தழுவுதல், மனை-வீடு நீலவான் நோக்கும் நெற்கதிர் "தலைவனே, நீ வந்த நாளைப் பெற்று அமைய முடியும் எங்களால் நின்னை இடைவிடாது விரும்பும் பிற பெண்களிடத்துச் சென்று இன்பமளிப்பாயாக, யாம் நீ வருந்துணையும் பொறுத்தாற்றி இருப்போம். நீ ஒர் ஆண்டுக்கு ஓர் முறைதான் எம்மிடத்து வருகின்றாய். என்றும் நீ எம்மிடத்தே