பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 31 ; "ஐய அமைந்தன்

றனைத்தாகப் புக்கீமோ வெய்யாரும் வீழ்வாரும் வேறாகக் கையின் முகைமலர்ந் தன்ன

முயக்கில் தகையின்றே தன்பனி வைகல்”

எமக்கு

கலித்தொகை : மருதம்

(ஐய-தலைவனே : அமைந்தன்று - பொருந்தியது. புக்குஈமோ-சென்று கொடுப்பீராக. வெய்யர்-விரும்புவார்; வீழ்வார்-விரும்பப்படுவார், கையின்-கையினால்: முகை-மொட்டு; வைகல்-பொழுது)

பனிக்காலத்தில் வந்த தலைவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கிறாள், தலைவி சொல்லாமற் சொல்லி விளக்குகிறாள். "வலியமலர்த்திய மென்மலர்" கருத்துக்கள் பொதிந்த அழகிய உவமை இது.

அவன் கண்ட கடவுள்

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நாள் பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் வந்து சேர்ந்தான். தலைவி எங்கே போயிருந்தீர்? என்று கேட்டாள். நாம் உடனுறைந்து வாழும் வாழ்கைக்கு தோன்றாத் துணையாக நின்று காத்து வரும் கடவுளர்களின் கோட்டங்களை எல்லாம் வழிபடப் போயிருந்தேன் என்று கூசாமல் ஒரு பொய்யை எடுத்துவிட்டான் தலைவன். உண்மையில் தலைவன் போயிருந்த இடம் எது என்று தலைவிக்கு நன்றாக தெரியும். தெரிந்தாலும் அவன் என்ன சொல்லுகிறான் பார்ப்டோம் என்பதற்காகவே அவள் அவன்ை இப்படிக் கேட்டு வைத்தாள்.

அவன் போயிருந்த இடமோ பரத்தையர் சேரி, பேசுகின்ற இடமோ தூய்மையான கடவுளர் கோட்டம். பார்த்தாள் தலைவி, வஞ்சகப் பொய்யை வஞ்சகப் பேச்சாலேயே தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறாள். பேசுகிறாள் தலைவனை நோக்கி"நீ கண்ட கடவுளர்களுள் உன்னை மயக்கம் எய்தும் படியாக உன்