பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 32 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

மார்பைத் தழுவினர்கள் யாவரோ? அதைச் சிறிது கூறுவாயாக ஞானம் பற்றிய வினாக்களுக்கு அவ்வப்போது விடைகள் பகர்வோராயும், நெடியகரிய சடையையுடையவர்களுமாகிய கடவுளராகிய முனிவர்க்குக் கூட நினக்குக் கிடைக்கும் பொருள்களெல்லாம் கிடையாது முட்டுப்பாடு தோன்றுகிறது உன்னை அப்படிமயங்கச் செய்த அந்த "முனிவர்கள்" யார்தான் சொல்லு? நான் தெரிந்தது கொள்ளுகிறேன். தலைவனது நெஞ்சை வாள் போலறுக்கின்றன. தலைவியின் சொற்கள் சொல்லின் செல்வியாகத் தலைவியை மாற்றுகிறது. இந்தச் சந்தர்ப்பம். பெண்மை கனன்றால் புதுமை நிகழ்வது இயல்புதானே?

கண்ட கடவுளர்

தம்முளும் நின்னை வெறிகொள் வியன்மார்பு

வேறாகச் செய்து குறிகொளச் செய்தார் யார் செப்பு மற்றி யாருஞ் சிறுவரைத் தங்கின்

வெகுள்வர் செறுத்தக்காய் தேறினேன் சென்றி நீ

செல்லா விடுவாயேல் நற்றா ரகலத்துக்

கொருசார் மேவிய நெட்டிருங் கூந்தற்

கடவுள ரெல்லார்க்கும் முட்டுப்பாடகலும் உண்டு

(கலித்தொகை : மருதம்)

கடவுளர்-முனிவர், (நெறி கடக்கும் பரத்தையர்) செப்பு-சொல்லு, சென்றி-செல்க, அகலம்-மார்பு, நெடுமை-இருமை, நெட்டிரும்(நீண்டகரிய). முட்டுப்பாடு -இடையூறு) .