பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 34 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

உயர்ந்தவள்தான். உன்னிலும் இழிந்ததில்லை எனது கூன்பிறவி, யான் நினைத்தால் என்ன்ை எத்தனையோ பேர் பாதுகாப்பர். நீ என்னவோ பக்கத்திலே தழுவுவேன் என்று இகழ்கிறாய்!

"எம்மைப் புரப்போம்

என்பாரும் பலரால் என்பக்கத்துப் புல்லியா

யென்னுமால் தொக்க உழுந்தினுந் துவ்வாக்

குறுவட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு"

(கலித்தொகை: மருதம்)

(புரத்தல்-பாதுகாத்தல், புல்ஈயாய்-தழுவுதலைத்தருவாய், குறுவட்டு-சிறியகொப்பரை)

காதல் என்ற பேரில் நகைச்சுவைக்கு இலக்காக அமைகின்ற ஒரு காட்சியையும் வரைந்து காட்டுகின்றதை நோக்குங்கால் மருதன் இளநாகனார் வெறும் புலவர் மட்டுமல்ல; சுவை பயனுறுவாக மாறி அமைகின்ற பாலியல் நெறியையும் துணுகி ஆராய்ந்துள்ளவர் என்பதையும் அறிகிறோம். செய்தியைப் பார்க்கப்போனால் மிகச் சர்வசாதாரணமானதே. அது கவிதையாய் வரும் போதுதான் அபூர்வம்.

காதல் மருந்து

இங்ங்னம் தலைவியைக் கண்டு வருந்தி நின்ற தலைமகன் அவளுடைய தோழியைக் கண்டு தன்னுடைய குறையைக் கூறுகிறான். என்னுடைய காதல் நோய்க்குக் காதலே மருந்தாக அமைய முடியும். எனவே தலைவியைக் கண்டு தன்னுடைய குறையை எடுத்துக் கூறி அருள்செய்யும்படி வேண்டுவாயாக. யான் சிங்கத்தோடு போர்செய்யும் யானைபோல, மனமுடைந்து உருகுகிறேன். உன்னுடைய துணை இன்றேல் யான் அவளை அடைவது இயலாது என்று இவ்வாறு தன் காதல் நோய்க்கு மருந்து நாடிப் பலபல கூறி நிற்கின்றான்.